தமிழில் கணினி செய்திகள்

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒரு பார்வை

♠ Posted by Kumaresan R in , at 11:14 PM
இணையத்தை பயன்படுத்தும் பலரும் அறிந்த உலவி என்றால் அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி மட்டுமே ஆகும். இந்த உலவியானது இணைய பயனாளர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொசில்லா பயர்பாக்சின் வருகையால் தனது வாடிக்கையாளர்களை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வந்தது ஆனால் அன்மையில் வெளியான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் - 9 ன் வருகையால் மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது, இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி.  இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியானது 1995 ம் வருடம் முதல் முறையாக வெளிவந்தது. விண்டோஸ் 95 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்துடன் இணைந்து வெளியானது. முதல் முறை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் வெளிவரும் போது சாதரணமாகவே இருந்தது, ஆனால் தற்போது இருக்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியானது பன்மடங்கு மேம்படுத்தப்பட்டு உள்ளது.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.0 (1995):-
முதல்முறையாக வெளிவந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி விண்டோஸ் 95 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டும் பயன்படுத்துமாறு வெளிவந்தது.இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 2.0 (1995):-
இண்டர்நெட் எக்ஸ்புளோரருடைய இரண்டாவது பதிப்பு அதே வருடம் வெளியானது, ஆனால் இந்த பதிப்பு முந்தைய பதிப்பை விட சற்று மேம்படுத்தப்பட்டு வெளியானது , ஆனால் இந்த பதிப்பானது விண்டோஸ் மற்றும் மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் செயல்படுமாறு வெளியானது.இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 3.0 (1996):-
இந்த பதிப்பில் புதிய சிறப்பம்சங்கள் புகுத்தப்பட்டது ஈமெயில் மற்றும் ஆடியோ போன்ற சேவைகளை இந்த பதிப்பில் இருந்து  பயன்படுத்த முடிந்த்தது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 4.0 (1997):-
இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் அடுத்த பதிப்பு 1997 ம் வருடம் வெளியானது, புதிய வசதிகள் இந்த பதிப்பில் புகுத்தப்பட்டுள்ளது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 5.0 (1999):-
வணிகம் தொடர்பான புதிய வசதிகள் இந்த பதிப்பில் புகுத்தப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 6.0 (2001):-
முந்தைய பதிப்பைவிட பல புதிய அம்சங்கள் இந்த பதிப்பில் புகுத்தப்பட்டட்து, டூல்பார் போன்ற புதிய வசதிகள் இந்த பதிப்பில் இருந்தே இணைக்கப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 (2006):-
இந்த பதிப்பில்தான் முதல்முதலாக டேப் வசதி தொடங்கப்பட்டது, மேலும் இண்டர்நெட் ப்ரவுசிங் ஹிஸ்ட்ரியை கிளியர் செய்யும் வசதியும் இந்த பதிப்பில்தான் புகுத்தப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8.0 (2009):-
அதிவேக திறத்துடன் வெளிவந்த பதிப்பாகும். இதில் Private Browsing அறிமுகப்படுத்தப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9.0 (2011):-
தற்போது பயன்படுத்தப்படும் பதிப்பு 9.0 ஆகும். முந்தைய பதிப்புகளை விட இந்த பதிப்பு மிகச்சிறப்பாக உள்ளது என இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர்  தனது முந்தைய பதிப்புகளை விட, இந்த புதிய பதிப்பானது பல மடங்கு சிறப்பாக உள்ளது.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிவிறக்க சுட்டி

1 comments:

அருமை! சூப்பரான தகவல்

Post a Comment