தமிழில் கணினி செய்திகள்

ஜிமெயிலின் ஒரே கணக்கை பயன்படுத்தி பல கணக்குகளை கையாள

♠ Posted by Kumaresan R in , at 4:35 PM
ஈமெயில் சேவையில் உச்சத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தன்னுடைய ஈமெயில் சேவையில் புதுப்புது வசதிகளை புகுத்தி வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் அளிக்கும் வசதிதான் ஒரே ஈமெயில் கணக்கை பயன்படுத்தி பல ஈமெயில் முகவரிகளை உள்ளினைத்து,  புகுத்தப்பட்ட ஈமெயில் கணக்கை பயன்படுத்தி அதிலிருந்து ஈமெயில்களை அனுப்பி கொள்ள முடியும். நான் முன்பே கூறியது போல ஈமெயில் முதலிடத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம் ஆகும். ஒரு காலத்தில் யாகூ நிறுவனத்துடைய ஈமெயில் சேவையே அதிகம் பயன்படுத்தப்பட்டது ஆனால் தற்போது யாகூ தன்னுடைய வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது இதற்கு காரணம் ஜிமெயில் நிறுவனம் மட்டுமே ஆகும். இந்த நிறுவனம் அளிக்கும் புதுப்புது வசதிகள் மட்டுமே ஆகும். அந்த வகையில் ஜிமெயில் நிறுவனம் அளிக்கும் வசதிதான், ஒரே ஈமெயில் கணக்கை பயன்படுத்தி பல முகவரிகளை உள்ளினைத்து ஈமெயில் அனுப்ப முடியும். சுருங்கமாக சொல்ல வேண்டுமெனில் From அட்ரஸ்யை மாற்றிக்கொள்ளும் வசதி ஆகும். 

இந்த வசதியை உள்ளினைக்க முதலில் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் Settings பொத்தானை அழுத்தி Accounts and Import என்னும் பட்டியை கிளிக் செய்யவும்.


அதில் send mail as என்னும் பகுதியில் Send mail from another address என்னும் பொத்தானை கிளிக் செய்யவும்.


Name என்னும் பாக்சில் உங்களுடைய பெயரை உள்ளிடவும், அடுத்த பாக்சில் உங்களுடைய ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Next Step பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Send Verification என்னும் பொத்தானை அழுத்தவும், அடுத்ததாக உள்ளிட்ட ஈமெயில் கணக்கில் நுழைந்து Verification கோடினை காப்பி செய்து, தோன்றும் விண்டோவில் உள்ளிட்டவும்.


இல்லையெனில் Verification லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். Compose mail பட்டியை அழுத்தவும். இப்போது From அட்ரஸ் டேப் இணைக்கப்பட்டிருக்கும்.


அதை பயன்படுத்தி ஈமெயில் அனுப்பி கொள்ள முடியும். இதே முறையை பயன்படுத்தி பல ஈமெயில் முகவரிகளை இணைத்துக்கொள்ள முடியும்.

6 comments:

மிகவும் பயனுள்ள பதிவு நண்பா ..

மிகவும் பயனுள்ள பதிவு நண்பா ..

மிகவும் பயனுள்ள பதிவு நண்பா ..

மிகவும் பயனுள்ள பதிவு நண்பா ..

மிகவும் பயனுள்ள பதிவு நண்பா ..

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Sir,
this is very very special information sir thank you

மிகவும் பயனுள்ளது. இன்னும் புதிய தகவல்களை இனைக்க

Post a Comment