தமிழில் கணினி செய்திகள்

GIF அனிமேஷன் பைல்களை உருவாக்க DP Animation Maker

♠ Posted by Kumaresan Rajendran in , at March 29, 2011
நாம் சாதரணமாக படங்களை எடிட் செய்து மெருகேற்ற பல மென்பொருட்களின் உதவியினை நாடிச்செல்வோம் உதாரணமாக போட்டோசாப் மென்பொருளின் மூலமாக படங்களுக்கு அழகூட்ட முடியும். மேலும் படங்களை அழகூட்ட வேண்டுமெனில் எதாவது ஒரு மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும். நாம் இணையத்தில் வலம் வரும்போது பார்த்தால் ஒரு சில வலைதளங்களில் மட்டும் படங்கள் மின்னும், ஒடும் ஏதோ ஒரு செயலை குறிப்பிடுவது போன்ற செய்கைகளை செய்யும் அதுபோன்ற செய்கைகளை நாம் அனைத்து படங்களிலும் காண முடியாது இதற்கு காரணம் அவ்வாறு செய்கைகளை செய்யும் படங்கள் அனைத்தும் GIF பைல் பார்மெட்டிலோ அனிமேஷன் பைல் பார்மெட்டிலோ படங்கள் இருக்கும். இந்த படங்களை நாம் எவ்வாறு உருவாக்குவது புதிய அனிமேஷன்களை எவ்வாறு படத்தில் இணைப்பது போன்ற பலவும் பலருக்கு குழப்பமாகவே இருக்கும். அனிமேஷன் பைல்களை உருவாக்க வேண்டுமெனில் அது மாயா,ப்ளாஷ் போன்ற எதாவது ஒரு மென்பொருளுடன் உதவியுடன் மட்டுமே ஆகும். இந்த மென்பொருட்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் இருக்கும் மென்பொருட்கள் ஆகும். இந்த மென்பொருளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமெனில் அதனை தனியே கற்க வேண்டும். சாதரணமாக ஒரு படத்திற்கு அனிமேஷன் உருவாக்கம் செய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.


மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து விருப்பமான படத்தை தேர்வு செய்துகொண்டு, உங்களுக்கு பிடித்தமான அனிமேஷன் தேர்வினை இணைக்கவும். 


இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலமாக உருவாக்கும் அனிமேஷன் பைல்களை gif, exe மற்றும் வீடியோ பைலாகவும் கணினியில் சேமித்துக்கொள்ள முடியும். சாதரண படத்தை சரியான அனிமேஷன் படமாக உருவாக்க இந்த மென்பொருளானது மிகவும் உதவி செய்யும்.

1 comments:

கனிணி இயக்கங்களை இலகுவாக அறிந்துக் கொள்ள தக்கவகையில். மிக்க மகிழ்ச்சி.

Post a Comment