தமிழில் கணினி செய்திகள்

VIPRE ஆண்டிவைரஸ் இலவசமாக 90 நாட்கள் லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan R in , at 6:43 PM

கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் ஆண்டிவைரஸ் மென்பொருளும் ஒன்றாகும். அதுவும் இணைய இணைப்பு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் நம்முடைய கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவி ஒரு மாதம் கூட இல்லை அதற்குள் கணினியில் பல வைரஸ்கள், கணினியானது மந்தமாக வேலை செய்கிறது போன்ற செய்திகளை நண்பர்களிடம் கேட்டிருக்கலாம். இதற்கு காரணம் அவர்கள் கணினியில் ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்கள். இல்லையெனில் இணையத்தில் இருந்து ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவர் அது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வேலை செய்யாது. கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவியவுடனே இன்ஸ்டால் செய்ய வேண்டிய மென்பொருள் என்றால் அது ஆண்டிவைரஸ் மென்பொருள் மட்டுமே ஆகும். இது போன்ற ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே நன்றாக இருக்கும். இல்லையெனில் அவையாவும் சிறப்பாக அமையாது பணம் கொடுத்து வாங்க முடியாத கணினி பயனாளர்கள் இலவசமாக ஆண்டிவைரஸ் நிறுவனமே கொடுக்கும் போது அதனை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல தற்போது வைபர் ஆண்டிவைரஸ் நிறுவனம் ஆண்டிவைரஸ் மென்பொருளை 90 நாட்கள் இலவசமாக வழங்குகிறனர். இந்தியாவில் இல்லை துருக்கியில் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.


இலவச லைசன்ஸ் கீ பெறுவதற்கான சுட்டி

கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் கன்வெர்ட் செய்யப்பட்ட இலவச லைசன்ஸ் கீ பெறுவதற்கான  சுட்டிகூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் குறிப்பிட்ட சுட்டிக்கு சென்று உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி,மொபைல் எண் மற்றும் உங்களுடைய தகவல்களை உள்ளிட்டு Send பொத்தானை அழுத்தவும். சிலமணி நேரங்களில் உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு இலவச லைசன்ஸ் கீயானது அனுப்பி வைக்கப்படும். மென்பொருளை தரவிறக்கம் செய்யவும் சுட்டியாது அனுப்பி வைக்கப்படும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். ஈமெயிலில் உள்ள கீயினை காப்பி செய்து மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது உங்களுடைய கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் முழுமையாக நிறுவப்பட்டிருக்கும். மென்பொருள் துருக்கியில் கிடைத்தால் என்ன ஜெர்மனியில் கிடைத்தால் என்ன வாய்ப்பு ஒருமுறை மட்டுமே, கிடைக்கும் போதே பயன்படுத்திகொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment