♠ Posted by Kumaresan Rajendran in Conversion,Freewares at March 04, 2011
அளவில் மிக்பெரிய பைல்கள் மற்றும் இயங்குதளங்கள் அனைத்துமே ISO பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். நாம் புதியதாக இணையத்தில் இருந்து பதிவிறக்கும் ஒரு சில மென்பொருள் கூட ISO பைல் பார்மெட்டில்தான் இருக்கும். லினக்ஸ் இயங்குதளங்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போதும் ISO பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இந்த பைல்களை பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய நாம் எதாவது ஒரு ரைட்டிங் மென்பொருளை அணுக வேண்டும். சிடி ரைட்டிங் என்றால் உடனே நினைவுக்கு வருவது நீரோ மென்பொருள் மட்டுமே. இந்த மென்பொருளில் ISO பைல்களை கன்வெர்ட் செய்து பூட்டபிள் பைலாக மட்டுமே உருவாக்க முடியும். மற்ற வசதிகள் எதுவும் இல்லை, குறிப்பாக வேறொரு பைல் (CUE, BIN, NRG, MDF, CDI) பார்மெட்டாக மாற்றம் செய்ய முடியாது. மற்ற இமேஜ் பைல் பார்மெட்களை ISO பைல் பார்மெட்டாகவும் மாற்றம் செய்ய முடியாது. இவையணைத்தையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ISO Workshop அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உங்களுக்கு தேவையான பல மெனுக்கள் இருக்கும் அதை பயன்படுத்தி உங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
ISO பைல்களை பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்யாமலேயே அதில் உள்ள பைலகளை காண முடியும். மேலும் வேறொரு இமேஜ் பைல் பார்மெட்டில் இருந்து ISO பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய முடியும். இந்த மென்பொருளானது CD-R/RW, DVD-R/RW, DVD+R/RW, DVD+R DL, BD-R/RE போன்ற சீடிக்களை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் அளவில் மிகச்சிறியதாகும், (3.6 MB) மட்டுமே ஆகும். இந்த மென்பொருளானது விண்டோஸ் NT/2000/XP/Vista/7 (32 and 64bit) ஆகிய இயங்குதளத்தில் வேலை செய்யக்கூடியது ஆகும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
3 Comments:
ரொம்ப நல்ல விடயங்கள் எழுதி இருக்கிறீர்கள். இவ்வளவு நாள் பார்க்க தவறி விட்டேன். நன்றி
நன்றி Mohamed Faaique,
ரொம்ப நன்றி
PILAL
Post a Comment