தமிழில் கணினி செய்திகள்

மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள்

♠ Posted by Kumaresan R in , at 10:00 PM
மல்டிமீடியா பணிகளை செய்ய நாம் தனித்தனி மென்பொருளை பயன்படுத்தி வருவோம். குறிப்பாக வீடியோ, ஆடியோ பிளேயர், கன்வெர்ட்டர், கட்டர், ஜாயினர் மற்றும் போட்டோ எடிட்டர் போன்ற வேலைகளை செய்ய தனித்தனி மென்பொருள்களை நாடி செல்வோம். அதுவும் வீடியோ, ஆடியோ பைல்களை கன்வெர்ட், கட் மற்றும் ஜாயின் செய்ய தனித்தனி மென்பொருளை நாடிச்செல்வோம். இவையனைத்தும் ஒரே மென்பொருளில் கிடைத்தால் எவ்வளவு ஈசியாக இருக்கும். அதுவும் இலவச மென்பொருள் என்றால் மிகப்பெரிய சந்தோஷம் தான். அப்படிப்பட்ட மென்பொருள் தான் Media Cope என்னும் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை எடிட் செய்யவும். போட்டோக்களை ஒண்றினைக்கவும் பயன்படுகிறது. 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மீடியோ கோப் அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் இருக்கும் தேர்வு  பொத்தான்களை பயன்படுத்தி நம்முடைய பணிகளை செய்து கொள்ள முடியும்.


இதன் மென்பொருளின் உதவியுடன் நெருப்புநரி மற்றும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவிகளில் இமேஜ்களை காண முடியும். மேலும் பல வசதிகளை பெற முடியும்.


ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் இந்த பிளேயருடைய உதவியுடன் mp3, aac, wma, flac, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv, vob, dat மற்றும் பல பைல் பார்மெட்களை கையாள முடியும். மேலும் ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய கட் செய்ய மற்றும் ஜாயின் பன்னுவதற்கு இந்த மென்பொருளில் வழிவகை உள்ளது. மேலும் போட்டோக்களை எடிட் செய்யவும் இந்த மென்பொருளில் வழிவகை உள்ளது. உண்மையிலேயே மீடியா பைல்களை எடிட் செய்ய இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும். இந்த மென்பொருளை பற்றி மேலும் சொல்ல தேவையில்லை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு பின் கூறுங்கள் உங்கள் முடிவை.

2 comments:

தங்களின் ஒவ்வொரு பதிவுகளையும் படித்து பயனடைவோர்களில் நானும் ஒருத்தன். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சுவையுடன் இருக்கக் கண்டேன். எனது தமிழ்த்தாகத்துக்கு ஏற்றவாறு அமைந்த அவையனைத்தும் ஒருங்கே கிடைக்க வகை செய்யும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
கேள்வி ???
எனது கணனி அடிக்கடி bluescreen ஆகிறது. இதற்கான காரணம், தீர்வு பற்றியும் விபரமாக அறியத்தரவும். இன்னும் பல பயனுள்ள கட்டுரைகளை எதிர்பாத்து காத்திருக்கிறேன்.

- தாவீது யோசெப்

Really Super post... Because all function in one software... thanks to shared...
By
http://hari11888.blogspot.com

Post a Comment