தமிழில் கணினி செய்திகள்

கோப்பு மற்றும் கோப்பறைகளுக்கு பயனாளர்களில் உரிமைகளை மாற்றியமைக்க

♠ Posted by Kumaresan Rajendran in , at May 24, 2011
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் இரண்டு விதமான பயனாளர் கணக்கு உள்ளது. ஒன்று முதன்மை பயனாளர் (Administrator) மற்றொன்று வரைவுபயனர் (Limited) என இரண்டு விதமான கணக்கு அமைப்புகள் உள்ளன. இவற்றில் முதன்மைபயனருக்கு அனைத்துவிதமான சுகந்திரமும் அளிக்கப்படுகிறது. அவரால்தான் கணிப்பொறியே கட்டுபடுத்தபடுகிறது. ஆனால் இந்த வரைவு பயனர் என்பவர் கணிப்பொறியில் உள்ள தகவல்களை பார்வையிடலாம், வேண்டுமெனில் நகல் எடுத்து கொள்ளவும் முடியும். ஆனால் கணினியுடைய முதன்மை செயல்பாட்டில் தலையிடமுடியாது. வரைவுபயனர் என்பவர் வீட்டிற்கு வந்த விருந்தினர் ஆவார். ஆனால் முதன்மை பயனாளர் என்பவர் வீட்ட்டின் உரிமையாளர் போன்றவர். விருந்தினரால் ஒரு வீட்டில் என்னனென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும். என்றால் சாதாரணமாக உள்ள செயல்பாடுகளையே செய்ய தயங்குவார், ஆனால் உரிமையாளருக்கு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை. 

இதைபோலதான் விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்பறைகளின் உரிமைகளும் இருக்கும். ஒரு சில நேரங்களில் டாக்குமெண்ட்களை கையாளும் போது  READ ONLY என்று காண முடியும். அதுபோன்ற டாக்குமெண்ட்களை எடிட் செய்ய இயலாது. இதுபோன்ற உரிமைகளை மாற்ற ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளானது NTFS பைல் பார்மெட்டில் மிக சிறப்பாக செயல்படும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டிமென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு, மென்பொருளை திறக்கவும். இந்த மென்பொருளானது போட்டபிள் மென்பொருள் ஆகும். பின் தோன்றும் விண்டோவில் கோப்புகளையும், கோப்பறைகளையும் ட்ராக் அன்ட் ட்ராப் செய்யவும். அடுத்து வேண்டிய உரிமையை தேர்வு செய்யவும். பின் குறிப்பிட்ட உரிமையின் மீது இரட்டை கிளிக் செய்யவும்.

நீங்கள் தேர்வு செயத உரிமைக்கு உள்ள அதிகாரங்களை காண முடியும். ட்ராக் அன்ட் ட்ராப் செய்து  உரிமையை தெரிவு செயத பின்னர் Set to Allow என்னும் பொத்தானை அழுத்தி உறுதிபடுத்தி கொள்ளவும். பேக்அப் செய்து கொள்ளவும். இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். கோப்பு மற்றும் கோப்பறைகளின் உரிமையினை மாற்றம் செய்து கொள்ள இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும். விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த மென்பொருள் மிகச்சரியாக வேலை செய்யக்கூடியது ஆகும்.

2 comments:

http://google.com/transliterate/indic/Tamil


blogs dont have maximum width for essay portions. it is tough to read essays directly in blogs. so, copy essays in blogs and paste it in above page. it has maximum width. u can read essays easily without need to scroll much....d...

http://google.com/transliterate/indic/Tamil


blogs dont have maximum width for essay portions. it is tough to read essays directly in blogs. so, copy essays in blogs and paste it in above page. it has maximum width. u can read essays easily without need to scroll much....d...

Post a Comment