நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்போம், அதில் நாம் ஒரு சில எழுத்தையோ அல்லது வார்த்தையையோ மாற்ற வேண்டி இருக்கும். அவ்வாறு மாற்ற வேண்டிய டாக்குமெண்டை எளிமையாக மாற்ற முடியும். இதனை நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது போட்டோ எடிட்டிங் மென்பொருள் துணைகொண்டு மட்டுமே மாற்றுவோம் இதற்கு பதிலாக, இமேஜ் பைலை வேர்ட் அல்லது டெக்ஸ்ட் பைலாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு இமேஜ் பைலை வேர்ட் பைலாக ஆன்லைனிலேயே மாற்றம் செய்ய சுட்டி. இவ்வாறு செய்வதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை இணைய இணைப்பு இல்லாமல் செய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக எளிதாக இமேஜ் பைலை வேர்ட் பைலாக மாற்ற முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து பின் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து குறிப்பிட்ட படத்தினை ஒப்பன் செய்யவும். பின் OCR என்னும் பொதியை அழுத்தவும். அந்த படமானது டெக்ஸ்ட் பைலாக மாற்றப்பட்டுவிடும். பின் Export Text into Microsoft Word என்னும் பொதியை அழுத்தி நேரிடையாகவே வேர்டில் தரவேற்றம் செய்து கொள்ள முடியும்.
மேலும் இந்த OCR to Word மென்பொருள் மூலமாகவே ஸ்கேன் செய்து வேர்ட் பைலாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருள் மூலமாக எளிமையாக இமேஜ் பைல்களை வேர்ட் பைலாக மாற்றிக்கொள்ள முடியும். இணைய இணைப்பு ஏதும் தேவை இல்லை.
5 Comments:
ரொம்ப நன்றி நண்பரே !
நண்பரே,
நல்ல பதிவு ...
உங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய
முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
பார்க்க
தமிழ் DailyLib
இந்த சேவை தொடர அவசியம்
அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்
To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
Thanks,
Krishy
வணக்கம் சார்,
ஒரு சிறிய சந்தேகம். புதிய செல் வாங்கினேன். முதல் நாள் மட்டும் 8 மணி நேரம் சார்ஜ் செய்ய சொன்னார்கள். ஒன்றரை மணி நேரத்திற்குள் பேட்டரி புல் என காட்டியது. அத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து நான் சார்ஜ் செய்தேன். கடையில் சொல்வது போல் 8 மணி நேர சார்ஜ் தேவையா? அல்லது அது மூடத்தனத்தினால் பரப்பப்பட்ட தவறான கருத்தா? ஒன்றரை மணி நேரத்தில் பேட்டரி புல் என காட்டுகின்றதே அத்தோடே சார்ஜ்ஜை கட் செய்தால் அது தவறா? அல்லது அதுதான் சரியா? எது சரி?
//Ka Said
வணக்கம் சார், நீங்கள் குறிப்பிடுவது போல் புதியதாக மொபைல் போன் வாங்கும் போது சொல்வார்கள், அது அவர்களுடைய மந்திர வாக்குகளில் ஒன்று. அதை நீங்கள் கண்டுகொள்ள தேவையில்லை. சார்ஜ் முழுவதும் ஏறியவுடன் நிறுத்திக்கொள்வது சிறந்தது ஆகும்.
வணக்கம் நண்பர்களே,
உங்களுக்கும் வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம உள்ளதா..? ஆனால் வெப்டிசைனிங் தெரியவில்லையா.....? கவலையை விடுங்க. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்களும் வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்களேன்.
Post a Comment