தமிழில் கணினி செய்திகள்

PDF கோப்பினை கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan R in ,, at April 30, 2013
தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரே டாக்குமெண்ட் பார்மெட்டாக .pdf டாக்குமெண்ட் மாறி வருகிறது இதற்கு காரணம் பிடிஎப் பைல் பார்மெட்டில் உள்ள கோப்புகளை எளிதில் உடைத்து எடிட் செய்து விட முடியாது. மேலும் எதாவது ஒரு பிடிஎப் ரீடர் மென்பொருள் இருந்தால் போதும் பிடிஎப் பைலை ஒப்பன் செய்துவிடலாம். சரி இவ்வாறு பிடிஎப் கோப்பாக உருவாக்கும் டாக்குமெண்ட்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை சரி செய்ய வேண்டுமெனில் நாம் கண்டிப்பாக மூன்றாம் தர மென்பொருளின் உதவியை நாடிச் செல்ல வேண்டும்.

வேர்ட், இமேஜ், எச்டிஎம்எல் மற்றும் பல்வேறு டாக்குமெண்ட்களை நாம் பிடிஎப் கோப்பாக மாற்றி பயன்படுத்துவோம். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மென்பொருளை நாட வேண்டும் அதற்கு பதிலாக பிடிஎப் கன்வெர்ட் தொடர்பான அனைத்து வேலைகளையும் ஒரே மென்பொருளில் செய்ய முடியும் அந்த மென்பொருளின் பெயர்தான் PDFMate.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து பின் Add PDF என்னும் பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலை தேர்வு செய்யவும். பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டுமோ அதை குறிப்பிட்டு பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். 

சிறிது நேரத்தில் கோப்பானது நீங்கள் குறிப்பிட்ட பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும். பின் நீங்கள் அதை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

8 comments:

மிகவும் பயனுள்ள மென் பொருள் ஆனால் இது தமிழ் பி‌டி‌எஃப் -ஐ வேர்ட் ஆக மாற்றி தறுமா ?தந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் ....

மிக மிக வேலையையும், நேரத்தையும் மிச்சப்படுத்தக் கூடிய அருமையான தகவல்., நன்றி

பயனுள்ள தகவல். நன்றி

மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே... பகிர்வுக்கு நன்றி

அன்பின் குமரேசன் - பயனுள்ள தகவல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பின் தொடர்வதற்காக்

thanks for introduction

Post a Comment