கணினியில் இயங்குதளத்தினை அடிக்கடி நிறுவும் போது வன்தட்டின் ஆயுள் காலம் குறைந்து விடும். மேலும் தேவையில்லாமல் கணினியில் அப்ளிகேஷன்களை கணினியில் நிறுவி பின் நீக்கும் போது வன்தட்டிற்கு பிரச்சினை ஏற்படக்கூடும்.
வன்தட்டினை முறையாக பராமரிக்காமல் இருந்தால் ஆயுள்காலம் கண்டிப்பாக குறைந்துவிடும். சில நேரங்களில் கணினியில் ஒன்றுக்கு மேலான அப்ளிகேஷன்களில் பனியாற்றிக்கொண்டிருக்கும் போது தீடிரென கரன்ட் இல்லாமல் கட் ஆகிவிடும். அப்போது கணினியில் நிலை கண்டிப்பாக பாதிக்கப்படும். மேலும் வன்தட்டானது சில நேரங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும். ஊதா நிற விண்டோ தோன்றி வன்தட்டானது சரியாக இல்லை அதை மாற்றம் செய்ய சொல்லும்.
இதுபோன்ற பிரச்சைகள் வரும் முன்னரே நம் கணினியில் வன்தட்டில் என்ன நிலையில் உள்ளது என்பதை நம்முடைய இயங்குதளத்தின் உதவியுடன் அறிந்துகொள்ள முடியும்.
இதற்கு முதலில் வின்கீ+R கீகளை ஒருசேர அழுத்தவும். அப்போது Run சாளரப்பெட்டி திறக்கும். அதில் cmd என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அடுத்து கட்டளை பலகை ஒப்பன் ஆகும் அதில் wmic என்று உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும்.
அடுத்து diskdrive get status என்று தட்டச்சு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.
உங்கள் வன்தட்டானது நன்றாக இருந்தால் OK என்ற செய்தி வரும். மிகவும் நன்றாக இருப்பின் OK OK என்று வரும். அதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். கணினியினுடைய வன்தட்டின் நிலையை.
14 Comments:
அட... இது வரை தெரியாத புதிய தகவல்... ஓகே வந்தது..
what does it mean if it shows alias not found...!!!!!!
what does it mean if it shows alias not found...?
பயனுள்ள தகவலுக்கு நன்றி...
பயனுள்ள தகவலுக்கு நன்றி...
usefull
தங்களது பதிவின்படி எனது வன்தட்டை பரிசோதித்து மூன்று ஓ.கே.வாங்கி விட்டேன்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
thanks nanbhaa
என் கணிணிக்கு மிகவும் அவசியமான தகவல் தகவலுக்கு நன்றி
இது வரை தெரியாத புதிய தகவல்... THANX
Thank you for your information.visit my blog kaliaperumalpuducherry.blogspot.com.Expecting your comments and suggestions
ok
பயனுள்ள தகவலுக்கு நன்றி....
Thank you for your information
Post a Comment