♠ Posted by Kumaresan Rajendran in Freewares,புகைப்படம் at April 16, 2013
போட்டோக்களை எடிட் செய்ய பல்வேறு மென்பொருள் இருந்தாலும் , கணினி பயன்பாட்டாளர்களால் அனைத்து மென்பொருள்களையும் முழுமையாக பயன்படுத்த தெரிந்திருக்காது. போட்டோவில் சிறுசிறு மாற்றங்களை செய்ய கூட பெரிய மென்பொருள்களில் உதவியை நாடி செல்வர் ஆனால் அவர்களால் அந்த குறிப்பிட்ட மென்பொருளில் அந்த வேலைகளை சரியாக செய்து முடிக்க இயலாது.
இதற்கு பதில் சிறு மென்பொருள்களின் உதவியுடன் போட்டோ எடிட்டிங் வேலைகளை அருமையா செய்து முடிக்க முடியும். இதற்கு PC Image Editor என்ற மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் PC Image Editor அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
அதில் Open என்னும் பொதியை அழுத்தி எடிட் செய்ய வேண்டிய படத்தை தேர்வு செய்யவும். பின் படத்தினை விருப்பபடி எடிட் செய்து கொள்ளவும். PC Image Editor மென்பொருள் மூலமாக கீழே காணும் அனைத்து எடிட்டிங் வேலைகளையும் செய்ய முடியும்.
- Brightness Adjustment
- Contrast Adjustment
- Saturation/Gamma/Hue Adjustment
- Lightness Adjustment
- RGB Color Adjustment
- Auto Contrast
- Auto Levels
- Invert and etc.
இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். அளவில் மிகச்சிறிய மென்பொருள் ஆகும்.
6 Comments:
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...
tamil computer thanks
கண்டிப்பா பயன்படுத்தி பார்க்கிறேன். நன்றி நண்பா
nanri ungal pakirvukku .....
Visit If you have time.
http://www.puthiyaulakam.com
Thank you for your valuable sharing
ok good
Post a Comment