தமிழில் கணினி செய்திகள்

250 மேற்பட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in , at June 05, 2011
இன்றைய இணைய உலகில் நூற்று கணக்கான வீடியோ பகிர்வு தளங்கள் உள்ளன. அவை யாவும் வீடியோக்களை இணையம் மூலமாக பிறரிடம் பகிர்ந்து கொள்ள உதவுகிறன. இதில் மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு தளம் யூடியூப் தளம் ஆகும். இது தவிர இன்னும் பல்வேறு வீடியோ பகிர்வு தளங்கள் உள்ளன. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே குறிப்பிட்ட வீடியோ தரவிறக்கம் செய்யும் வசதி இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடியோ பகிர்வு தளங்களில் இதுபோன்ற வசதி எதுவும் இருக்காது. இதுபோன்ற தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய All Video Downloader என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. 

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு, பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த வீடியோவை தரவிறக்கம் செய்ய வேண்டுமோ அந்த வீடியோவின் URLயை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தி வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் மூலமாக நமக்கு விருப்பமான பைல்பார்மெட்டில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். .avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, iPod, iPad, iPhone, Psp, Ps3  போன்ற பைல் பார்மெட்களில் வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். பல்வேறு தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இந்த ஒரே மென்பொருள் பயன்படுகிறது.

6 comments:

You tubeயிலிருந்து பாடல் videoக்களை idm(internet download manager) என்பதின் மூலம் download செய்தேன். பாடல்களை கணினியில் பார்க்க முடிந்தது. அவற்றை dvd disc ஒன்றில் write செய்தேன். அதை கொண்டு போய் dvd playerயரில் போட்டு tvயில் பார்க்க விரும்பினேன். ஆனால் பாடல்களை பார்க்க முடியவில்லை. Format was not supported. எனக்கு தெரிந்த ஒருவர் dvdயில் பதிவு செய்யப்பட்ட பாடல்களின் formatஐ பார்த்தார். அவை .flv என்ற formatல் இருந்தன. அவர் என்னிடம், "idm(internet download manager)மூலம் downloadசெய்தால் அது .flv என்ற formatட்டில்தான் வீடியோவை download செய்து தரும். .FLV formatஐ டிவியில் பார்க்க முடியாது. .FLV formatஐ mp4ஆக மாற்ற வேண்டும் என்றார். அதையும் இணையதளத்தில் இருந்து பெறப்பெற்ற software ஒன்றின் மூலம் செய்தேன். MP4 formatல் மாற்றம் செய்த பிறகும் dvd playerயரில் போட்டு tvயில் பார்த்தால் tvயில் video தெரியவில்லை. சப்தமும் கேட்கவில்லை. Format not supported என்று message ஒரு டிவியில் ஒரு வருகின்றது.

YOu tube videoவை இணையத்தில் இருந்து download செய்து அதை நான் என் tvயில் காண வேண்டும். அதற்கு எந்த formatல் youtube videoவை download செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட formatயிலேயே download செய்து தர உதவும் softwareஎது? அதை எந்த தளத்தில் இருந்து பெற வேண்டும்?

Please someone tell me...

நீங்கள் சொன்னது போல யூட்டுப் தளத்தில் இருந்து வீடியோவை தரவிறக்கம் செய்யும் போது அது .flv பைல் பார்மெட்டில்தான் இருக்கும். அதனை நாம் பிளேயர்களில் காண முடியாது. பிளேயர்களில் நீங்கள் AVI, Mpeg பைல் பார்மெட்டுடைய வீடியோ பைல்களை காண முடியும்.

.flv வீடியோ பைல்களை நீங்கள் .avi, .mpg பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்து பின் அதை ரைட் செய்து பிளேயர்களில் காண முடியும்.

நீங்கள் இதனை வீடியோ சீடி/டிவிடியாக ரைட் செய்தால் மட்டுமே காண முடியும். நீரோ பயன்படுத்தி ரைட் செய்தால் .flv பைல் பார்மெட்டை வீடியோ சீடி/டிவிடியாக ரைட் செய்ய அனுமதிக்காது.

நீரோவில் Nero visionயை பயன்படுத்தி ரைட் செய்யவும்.

Nero vision இல்லை. Nero smart essential உள்ளது. வீடியோ பாடல்களின் .flv formatட்டை .aviயாக‌ மாற்றினேன். அதனை nero smart essentialயில் burn video dvd என்பதின் மூலம் ரைட் செய்ய முயன்றேன். .Avi formatட்டை ரைட் செய்ய nero smart essential அனுமதிக்கவில்லை. இல்லை. அதனால் totalvideodownloader என்பதை இணையத்தில் இருந்து download செய்து அதன் மூலம் பாடல்களை mpegயாக மாற்றி simultaneousஆக அதனை ரைட் செய்த போது ரைட் ஆகியது. அதை கொண்டு போய் televisionயில் பார்க்கலாம் என்று முடிவு செய்து டிவிடி ப்ளேயரில் போய் போட்டேன். படமும் பாடலும் ஓடியது. ஆனால் படம் சரியாக ரைட் ஆகவில்லை. குளறுபடியாக கோடு கோடாக பார்க்க முடியாத விதத்தில் ரைட் ஆகியிருந்தது.

ஆகவே அதை தூக்கி எறிந்து விட்டேன்.

அதற்கு முன்பு நான் வைத்திருந்தது nero smart essentialயில் burn data dvdமூலம் ரைட் செய்யப்ட்ட டிவிடி டிஸ்க். அதில் .avi formatல் பாடல் வீடீயோ உள்ளது.அதன் formatட்டை televisionயில் பார்க்க முடியவில்லை. ஏன் என்றால் அது burn data dvd என்பதின் மூலம் ரைட் செய்யப்பட்டது. அதுவே என்னிடம் இப்போது உள்ளது. அதை எப்படி televisionயில் பார்ப்பது? Nero vision இல்லை. Burn video dvd என்பதின் வாயிலாக வேறு எந்த ரைட்டிங் software மூலம் ரைட் செய்தால் அதனை televisionயில் பார்க்க முடியும்?

place tell a friend sharing button below every post. It is the best among all other sharing buttons...i would like to email your essays using that button more easily(i can import my contact from yahoo or gmail by using that button or i can send it just hy typing email ids manually)

http://tellafriend.socialtwist.com/

Post a Comment