தமிழில் கணினி செய்திகள்

ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 யை இலவசமாக மூன்று மாத லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்க

♠ Posted by Kumaresan R in , at 11:22 PM
ஆண்டிவைரஸ்களில் பல்வேறு விதமான பதிப்புகள் உள்ளன. குறிப்பாக சாதரண கணினிகளில் ஆண்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்துவோம். இணைய இணைப்பு உள்ள கணினிகளில் இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை நிறுவி பயன்படுத்தினால் மட்டுமே நம்முடைய கணினிக்கு பாதுகாப்பு ஆகும். பல்வேறு இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள்களை நாம் பணம் கொடுத்தே பெற வேண்டும் ஆனால் தற்போது ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011யை இலவசமாக தருகிறனர். இந்த ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 மென்பொருளானது சென்ற வருடம் வெளியிடப்பட்டது ஆகும். ஆனால் தற்போது இந்த மென்பொருளை இலவசமாக தருகிறனர். இதற்கு முன் ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011யை வெளியிட்ட போது ஆறு மாதம் இலவசமாக தந்தனர். தற்போது ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011யை மூன்று மாதம் இலவசமாக தருகிறனர். உடனே சென்று பதிவிறக்கம் செய்யுங்கள்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய தகவல்களை உள்ளிடவும். படத்தின் மீது கிளிக் செய்து படத்தை பெரிதாக்கி பார்க்கவும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது Hasło z czasopisma என்ற செக் பாக்சில் Zima z AVG என்றும் Email என்ற செக்பாக்சில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிடவும். பின் ஒகே பொத்தானை அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும். பின் அதை ஒப்பன் செய்து உங்கள் கணக்கை உறுதி படுத்திக்கொள்ளவும். அடுத்து ஒரு மின்னஞ்சல் அனுப்பபடும் அதில் நீங்கள் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும், லைசன்ஸ் கீயும் அனுப்பி வைக்கப்படும்.


பின் இணைய உதவியுடன் மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கட்டாயமாக ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்யவும். இப்போது ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 மென்பொருளானது மூன்றுமாத லைசன்ஸ் கீயுடன் நிறுவப்பட்டிருக்கும். இணைய இணைப்பு இருந்தால் மென்பொருளை அப்டேட் செய்து கொள்ளவும்.

0 comments:

Post a Comment