ஆடியோ சீடியில் உள்ள பாடல்களை தனியே பிரித்தெடுக்க வேண்டுமென்றால் அது முடியாத விஷயமாக இருக்கும். ஆடியோ சீடிக்களை ட்ரைவில் இட்டு பார்த்தால் 1,2 கேபி அளவுள்ள பைல்களை மட்டுமே நம்மால் காணமுடியும். அந்த பைல்களை மட்டுமே நம்மால் பிரித்தெடுக்கவும் முடியும். ஏன் இதற்கு வேறு வழியே இல்லையா, ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்கவே முடியாத என்றால், கண்டிபாக பாடல்களை தனியே பிரித்தெடுக்க முடியும். இதற்கு பல்வேறு மென்பொருள் உதவி செய்கிறன. இவற்றில் பல பணம் கொடுத்து பெற வேண்டும். அந்த வகையில் ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க அதிகமாக பயன்படுத்தப்படும் மென்பொருள் Mp3 to Ringtone Gold. இந்த மென்பொருளை இலவசமாக நாம் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க இலவசமாக ஒரு மென்பொருள் உள்ளது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இப்போது ட்ரைவில் சீடியினை உள்ளிடவும். தற்போது பாடல்களை இந்த மென்பொருள் வாயிலாக காண முடியும். இப்போது வேண்டிய பாடல்களை தேர்வு செய்துகொண்டு, பாடல்கள் சேமிக்கபடவேண்டிய இடத்தை குறிப்பிடவும். தற்போது வெளியீட்டு பார்மெட்டையும் தேர்வு செய்யவும். தற்போது Convert என்னும் பொத்தானை அழுத்தவும்.
சில மணி நேரங்களில் பாடல்களை கன்வெர்ட் செய்யப்பட்டு, நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் வழக்கம் போல் பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் ஆடியோ சீடிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
4 Comments:
பகிர்வுக்கு நன்றி சார்
இதே வசதிகள் கொண்ட freerip MP3 என்ற மென்பொருள் அளவிலும் சிறியது.wav,mp3,vorbis,wma,flac போன்ற ஃபார்மேட்களில் பதிவு செய்யலாம். freerip basic இலவச பதிப்புதான்.2.7 mb அளவுதான்.
பதிவிறக்கம் செய்ய இணைப்பு
http://www.freerip.com/download.php
நன்றி..!!!
நன்றி மாணவன்,பிரகாசம், தங்கம்பழனி.
Post a Comment