பேஸ்புக் தளமானது தற்போது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுளை மிஞ்சும் அளவிற்கு இதில் வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர். பிகாசா தளம் தற்போது கூகுள் நிறுவனத்திடம் உள்ளது. இந்த தளம் மூலம் கூகுள் கணக்குடைவர்கள் இந்த தளத்தில் பதிவேற்றி கொள்ள முடியும். கூகுள் கணக்கில் பதிவேற்றும் போட்டோக்கள் அனைத்தும் பிகாசாவிலேயே பதிவேற்றப்படும். நம்முடைய போட்டோக்களை பெரும்பாலும் பேஸ்புக் தளத்திலேயே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம். இவ்வாறு முகநூலில் பகிர்ந்து கொண்ட உங்களுடைய போட்டோக்களை வேண்டுமெனில் பிகாசாவில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். பேஸ்புக் கணக்கில் உள்ள போட்டோக்களை பிகாசா தளத்தில் பதிவேற்ற குரோம் நீட்சி ஒன்று உதவி செய்கிறது.
Move2Picasa குரோம் நீட்சி
சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒருமுறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது உங்களுடைய பேஸ்புக் கணக்கு மற்றும் கூகுள் கணக்கினை குரோம் உலவியில் திறந்து வைத்துக்கொள்ளவும். தற்போது Move2Picasa
என்னும் ஐகானை அழுத்தவும்.
தற்போது தோன்றும் விண்டோவில் உங்களுடைய பேஸ்புக் கணக்கில் உள்ள போட்டோக்கள் வரிசைப்படுத்தப்படும். வேண்டிய போட்டோவினை தேர்வு செய்துவிட்டு பின் Upload என்னும் பொத்தானை அழுத்தவும்.
இணைய வேகத்தை பொறுத்து உங்களுடைய போட்டோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக பதிவேற்றப்படும். பின் சிலமணி நேரங்களில் உங்களுடைய போட்டோக்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுவிடும். தற்போது உங்களுடைய பிகாசா கணக்கில் பேஸ்புக் கணக்கில் நீங்கள் குறிப்பிட்ட போட்டோக்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுவிடும்.
1 Comments:
Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்
Post a Comment