தமிழில் கணினி செய்திகள்

வலைப்பக்கத்தினை சேமிக்க (பிடிஎப் மற்றும் இமேஜ்) பார்மெட்களில்

♠ Posted by Kumaresan R in , at 10:34 AM
வலைப்பக்கங்கள் பொதுவாக HTML பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இதனை நாம் பிடிஎப் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்களில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதனை நாம் நெருப்புநரி மற்றும் குரோம் உலவிகளில் செய்ய முடியும். பிடிஎப் மற்றும் இமேஜ் பைல்களாக மாற்றுவதால் நாம் இதனை உலவிகளின் துணை இல்லாமலே காண முடியும். இந்த நீட்சியில் மூலம் நாம் வலைப்பக்கத்தில் உள்ள எழுத்து, படம் போன்றவற்றை இணைத்தோ இல்லையெனில், வெறும் எழுத்துக்களை மட்டுமோ தனியாக சேமித்துக்கொள்ள முடியும். 

நெருப்புநரி உலவிக்கான நீட்சி

குரோம் உலவிக்கான நீட்சிஇந்த நீட்சிகளை குறிப்பிட்ட உலவிகளில் நிறுவிக்கொள்ளவும். பின் உலவிகளை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது நீட்சிக்கான சுட்டி உங்கள் உலவியில் இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எந்த வலைப்பக்கத்திற்கு சென்றாலும், அந்த வலைப்பக்கத்தினை பிடிப் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்களில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இந்த நீட்சியின் மூலம், நாம் இமேஜ் பைல்களை JPEG, PNG, GIF, BMP மற்றும் பல்வேறு பைல் பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும். பிடிஎப் பைல்களை A4, A3, Legal, B10 மற்றும் பல்வேறு பைல்பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும். நெருப்புநரி உலவியில் நீட்சிக்கான ஐகான் தெரியவில்லையெனில் Ctrl + / கீகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் காணமுடியும். இல்லையெனில் View > Toolbars > Add-on Bar வழியாகவும் இந்த நீட்க்காண ஐகானை காண முடியும். இதில் உள்ள குறைபாடு என்னவெனில் ஒருசில தமிழ்வலைப்பக்கங்களை மட்டுமே சரியாக சேமிக்க முடியவில்லை. ஆனால் மற்ற அனைத்து வலைப்பக்கங்களையும் எளிமையாக சேமிக்க முடியும்.

6 comments:

தகவலுக்கு நன்றி நண்பா ,உபயோகமான தகவல் ...

நன்றி
ராஜா,
கந்தசாமி.

i never know you can save like this

your lovingly gonzalez

http://funny-indian-pics.blogspot.com

மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி! நன்றி!!

Post a Comment