♠ Posted by Kumaresan Rajendran in BLOG at July 13, 2011
பிளாக்கரை மேம்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள வசதிதான் Favicon ஐகானை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்வது ஆகும். முன்பெல்லாம் Favicon யை மாற்றம் செய்யம் வேண்டுமெனில் HTML கோடில் எடிட் செய்து Faviconக்கான கோடினை உள்ளினைக்க வேண்டும். இதனால் பலர் Favicon யை மாற்றம் செய்யாமல் உள்ளதே போதும் என்று வைத்திருந்தனர். சிலருக்கு அலுப்பு ஏன் இதை மாற்றி என்ன ஆக போகிறது என்று. Favicon ஐகான் நம்முடைய தளத்திற்கான அடையாளம் ஆகும். இதனை மாற்றம் செய்ய முன்புபோல அவஸ்த்தை படவேண்டிய அவசியம் இல்லை. இதனை பிளாக்கரிலேயே மிகவும் எளிமையாக செய்ய முடியும். இதற்கு முதலில் நீங்கள் உங்களுடைய பிளாக்கர் கணக்கில் நுழையவும். பின் Design > Page Elements என்னும் வரிசையில் தேர்வு செய்யவும்.
பின் Favicon என்னும் தேர்வினை அழுத்தவும். தற்போது தோன்றும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய படத்தை தேர்வு செய்யவும். படமானது 100 கே.பி க்குள் இருக்க வேண்டும். பின் Save என்னும் பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும்.
பின் ஒரு முறை உங்களுடைய கணக்கை மூடிவிட்டு, உலவியினை ஒருமுறை மறுதொடக்கம் செய்துவிட்டு, தற்போது உங்களுடைய வலைப்பூவினை திறக்கவும். நீங்கள் குறிப்பிட்ட படமானது Favicon கானாக இருக்கும்.
இது ஏற்கனவே பலருக்கு தெரிந்திருக்கலாம். எனினும் இந்த பதிவு புதியவர்களுக்காக மட்டுமே ஆகும்.
5 Comments:
நன்றி!உண்மையாகவே புதியவர்களுக்கு பயன்படும்.
அப்படியே இப்பதிவைப் படித்து தங்களின் கருத்தைக் கூறவும். விருப்பமிருப்பின் இன்ட்லியில் ஓட்டுப் போட்டு பலரை பதிவு சென்றடைய உதவவும்.
இணைப்பு:http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html
நன்றி FOOD, தங்கம்பழனி.
நல்ல பதிவு..முயற்சி செய்கிறேன்.
வாழ்த்துக்கள்
எனது பக்கம்...
http://sempakam.blogspot.com
naan muyarchi seythu parththen mudiya villai udhavungal
en valai: www.sparkkarthikovai.blogspot.com
Post a Comment