தமிழில் கணினி செய்திகள்

கணினியின் நிலையை அறிய

♠ Posted by Kumaresan R in , at 1:55 AM
கணினியில் இருக்கும் வன்பொருள்களை பொறுத்தே கணினியினுடைய வேகமும் அமையும். ஒரு சிலர் தனது கணினி ஆமை வேகத்தில் உள்ளது என்று கூறுவார்கள், ஒரு சிலரோ எனது கணினி என்னைவிட வேகமாக உள்ளது. என்று கூறுவார்கள் இதற்கு காரணம் கணினியில் இருக்கும் வன்பொருள்கள் ஆகும். மேலும் அதற்கேற்றார் போல் மென்பொருளும் சரியாக அமைய வேண்டும். சரி கணினி ஆமையோ முயலோ எதுவாக இருந்தாலும் இதை எப்படி நாம் சரியாக கணக்கிடுவது என்றால் இதற்கும் மென்பொருள்கள் உண்டு. அதில் ஒன்றுதான் NovaBench.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Start Benchmark Tests என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் உங்கள் கணினினுடைய RAM மற்றும் வன்பொருள்கள் சோதிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும் டிஸ்பிளே எந்த அளவு உள்ளது என துல்லியமாக பார்க்க முடியும். அதற்கான காட்சி படத்தையும் காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலமாக நம் கணினியில் எதாவது குறையிருப்பின் அதையும் அறிந்து கொள்ள முடியும்.

7 comments:

சூப்பர் பாஸ்!!
அப்புறமா நம்ம வலை பதிவு நண்பர்களுக்காக ஒரு நியூஸ்

<< Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>
Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க.

மிக்க நன்றி குமரேசன் அவர்களே..!

சகோதரா வெற்றியோடு திரும்பி வாங்க... தங்களைப் போன்ற வழிகாட்டிகள் வலைப்பூக்களுக்கு தேவை...

வருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி
குகன்,
தங்கம்பழனி.

//ம.தி.சுதா

சகோதரா வெற்றியோடு திரும்பி வாங்க... தங்களைப் போன்ற வழிகாட்டிகள் வலைப்பூக்களுக்கு தேவை//

கண்டிப்பாக முயற்ச்சி செய்கிறேன். நன்றி.

முதலில் உங்கள் மேல்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ய வாழ்த்துக்கள் ..
இந்த மென்பொருள் உபயோகிக்கும் போது வேறேதேனும் மென்பொருள் ஓபன் இருந்தால் இந்த முடிவுகளில் ஏதேனும் மாற்றங்கள் வருமா ?

//FARHAN
முதலில் உங்கள் மேல்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ய வாழ்த்துக்கள் ..
இந்த மென்பொருள் உபயோகிக்கும் போது வேறேதேனும் மென்பொருள் ஓபன் இருந்தால் இந்த முடிவுகளில் ஏதேனும் மாற்றங்கள் வருமா//

நன்றி நண்பரே.,

கண்டிப்பாக மாற்றம் வரும். எந்த அப்ளிகேஷனும் ஒப்பன் ஆகி இருக்க கூடாது.

Post a Comment