♠ Posted by Kumaresan Rajendran in Freewares,விண்டோஸ்-7 at July 19, 2011
விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் முன்பு இருந்த விஸ்டோஸ் விஸ்டா, எக்ஸ்பியினை விட பன்மடங்கு மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் இருக்கும் ஸ்டார்ட் மெனுகூட சற்று மேம்படுத்தப்பட்டு இருந்தது. இந்த மெனுவினை கணினிக்கு புதியவர்களால் எளிதில் பயன்படுத்த முடியாது. அவர்களால் வேகமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பணியாற்றவும் முடியாது. இந்த குறைபாட்டினை தீர்க்க ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக கிளாசிக் மெனுவினை எளிதில் பெற முடியும். சாதாரணமாக உள்ள விண்டோஸ்7 மெனு.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தில் உதவியுடன் பதிவிறக்கம் செய்யவும். பின் இந்த ஜிப் பைலை அன்ஜிப் செய்து கொள்ளவும். இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். ஆகையால் இந்த மென்பொருளை ஒப்பன் செய்தாலே போதுமானது. ஆனால் கணினியை மறுதொடக்கம் செய்கையில் மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடும் என்பது குறிப்பிடதக்கது. இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
3 Comments:
super,by Damel
super by Damel
superda
Post a Comment