தமிழில் கணினி செய்திகள்

போட்டோக்களை மெறுகேற்ற - சிறந்த 10 தளங்கள்

♠ Posted by Kumaresan R in ,, at 2:24 AM
வணக்கம் நண்பர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறேன். இன்று நாம் பார்க்க போவது படங்களுக்கு எவ்வாறு கூடுதல் அழகு சேர்ப்பது என்றுதான், படங்களை அழகூட்டுவது என்றவுடன் போட்டோசாப் அல்லது எதாவது மூன்றாம் தர போட்டோ எடிட்டிங் மென்பொருளை பயன்படுத்தபோவதில்லை. இதனை நாம் ஆன்லைன் உதவியுடன் செய்யப்போகிறோம். இணையத்தில் போட்டோக்களுக்கு அழகூட்ட பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில் சிறந்த பத்து தளங்களை தான் இங்கே வரிசை படுத்த போகிறேன்.  
சுட்டியில் குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று உங்களுக்கு வேண்டிய டிசைனை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படத்தினை பதிவேற்றம் செய்யவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட போட்டோ, நீங்கள் தேர்வு செய்த டிசைனோடு இணைந்து இருக்கும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இதன் மூலம் எளிமையாக உங்களுடைய படத்திற்கு அழகூட்ட முடியும்.
இப்போது நீங்கள் குறிப்பிடும் அளவிலும் படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இது போன்று உருவாக்கு படங்களை நாம் எளிதில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். மணி கணக்கில் உட்கார்ந்து போட்டோசாப் அல்லது போட்டோ எடிட்டிங் மென்பொருளில் செய்யும் வேலை ஆன்லைனில் சிலமணி துளிகளில் செய்துவிட முடியும். இதனால் நமக்கு நேரம் மிச்சமாகும். மேலும் நாம் விரும்பிய வடிவங்களில் படத்தினை உருவாக்கி கொள்ள முடியும்.

    1 comments:

    Post a Comment