வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், நாம் அனைவரும் நாடிச்செல்வது யூடியூப் தளம் ஆகும். ஆனால் இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளையோ அல்லது நீட்சிகளின் உதவியை நாடிச்செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாமல் சாதாரணமாக ஆன்லைனில் இருந்து நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்கு Clip.Dj என்னும் தளம் உதவி செய்கிறது. இந்த தளத்தில் எந்தவித மூன்றாம்தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தளத்திற்கான சுட்டி
பின் சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வீடியோவிற்கான குறிச்சொல்லை இட்டு தேடவும். பின் விருப்பமான வீடியோவை பதிவிறக்கம் செய்ய Download என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த வீடியோக்களை MP3 மற்றும் MP4 பார்மெட்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஆன்லைனில் இருந்தபடியே பாடலை MP3 யாகவும், MP4கவும் கேட்க முடியும். மேலும் பதிவிறக்கிய வரிசைப்பட்டியலை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியும்.
1 Comments:
வழக்கம் போல இந்த பதிவிலும் நிறைய உபயோகமான செய்திகள்..வாழ்த்துக்கள்..
Post a Comment