தமிழில் கணினி செய்திகள்

ஆடியோ பைலை மற்றொரு ஆடியோ பார்மெட்டிற்கு மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,, at August 09, 2011
ஆடியோ பைல்கள் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது mp3, mp4 பைல் பார்மெட்கள் மட்டுமே ஆகும். இன்னும் இதுதவிர பல்வேறு ஆடியோ பைல் பார்மெட்கள் உள்ளன. அவை MP3, AAC, WAV, WMA, CDA, FLAC, M4A, MID, MKA, MP2, MPA, MPC, APE, OFR, OGG, RA, WV, TTA, AC3, DTS இது போன்று இன்னும் பல்வேறு பைல் பார்மெட்கள் உள்ளன. இவையாவும் தனித்தனி ஒலி அமைப்புகளில் செயல்படக்கூடியது ஆகும். நாம் ஏன் ஒரே பைல் பார்மெட்டில் வைத்திருந்தால் என்ன என்று நீங்கள் கேட்கலாம், இவ்வாறு மாற்றுவதால் என்ன நன்மை என்று நம்மில் பலருக்கு சந்தேகம் எழக்கூடும். நம்முடைய கணினியில் அனைத்து விதமான ஆடியோ பைல்ககளையும் நம்மால் கேட்க முடியும். ஆனால் ஐபேட், மொபைல்போன்களில் இதுபோன்ற வசதிகள் குறைவும் ஒரு சில குறிப்பிட்ட  ஆடியோ பைல் பார்மெட்களை மட்டுமே சப்போர்ட் செய்யும் இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் அனைத்து விதமான ஆடியோ பைல்களையும் கேட்க முடியாது. இந்த நிலையை தவிர்க்க நாம் வேண்டிய ஆடியோ பைல் பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உள்ள Add என்னும் சுட்டியை அழுத்தி ஆடியோ பைல்களை உள்ளினைத்து கொள்ளவும். பின் Output என்ற இடத்தில் விருப்பமான ஆடியோ பைல் பார்மெட்டினை தேர்வு செய்யவும். இந்த மென்பொருள் மூலம் கன்வெர்ட் செய்யக்கூடிய ஆடியோ பைல் பார்மெட்கள் AAC, AC3, AIFF, AMR, AU, FLAC, MP3, M4A, MP2, OGG, WAV, WMA ஆகியவை ஆகும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 


இந்த மென்பொருள் மூலமாக ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல், ஆடியோ பைல்களை ஒன்றினைக்கவும். குறிப்பிட்ட ஆடியோ பைலில் இருந்து வேண்டிய பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுக்கவும் முடியும். இந்த மென்பொருள் மூலமாக ஆடியோ பைல்களை எளிமையாக வெட்ட முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

0 comments:

Post a Comment