தமிழில் கணினி செய்திகள்

ஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,, at August 20, 2011
விண்டோஸ் இமேஜ் பைல் பார்மெட்டில் குறிப்பிடதக்கது  ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும்.  இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இவ்வாறு உள்ள ஐஎஸ் பைல்களை பூட்டபிள் பைலாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும். இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண பைல்களை ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு,  ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட பைலை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும். 


குறிப்பிட்ட சில மணி நேரங்களில் பைலானது கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள்  சீடி, டிவீடி மற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும்.  இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். ஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.

7 Comments:

ballance games iso file ஆக உள்ளது .எனது கணினில் இன்ஸ்டால் பண்ணினால் டெஸ்க்டாப் பில் icon வருது ,பின்பு cd யை எடுத்து விட்டு ,ballance கேம்ஸ் ஸ்டார்ட் பண்ணினால் plz insert CD என்று வருகிறது ,இதற்கு வழி சொல்லவும்.அதன் பின்பு கேம்ஸ் விளையாடலாம் .ஆனால் CD யை வெளியே எடுத்துவிட்டால் கேம்ஸ் வேலை செய்யாது,

அருமையான தகவல் நன்றி

உபயோகமுள்ள தகவல் நன்றி ...


Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

பயன்மிகு பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி..!

http://ravidreams.net/forum/topic.php?id=104

ஒரு உதவி தேவை

மேலே உள்ள லின்க்கில் சொல்லப்பட்டுள்ளதை வைத்து MS wordல் தமிழ் கட்டுரைகளை பேஸ்ட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்தேன். புள்ளிகளும், எழுத்துகளும் இடம் மாறி மாறி வருகின்றன.

சலிப்படைந்து போனேன்.

தமிழ் கட்டுரைகளை mswordல் பிரிண்டு அவுட் எடுக்கும் ஆர்வம் போய்விட்டது.

http://www.google.com/transliterate


இந்த பேஜில் paste செய்து தமிழ் கட்டுரைகளை print out எடுத்தேன். பிரிண்ட் அவுட் எடுத்த பிறகு left margin மிகவும் குறுகலாய்
வருகின்றது. left மார்ஜினை increase செய்யும் வசதி google chromeல் இல்லை.

தமிழ் கட்டுரைகளை நல்ல முறையில் print out எடுக்க நல்ல வழி ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.

நன்றியோடு உங்களை நினைத்துக் கொண்டு இருப்பேன்.

Post a Comment