தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ்7-ல் Auto Sleep mode னை Disable செய்வது எவ்வாறு?

♠ Posted by Kumaresan Rajendran in ,, at November 14, 2010
கணினியை சிறிது நேரம் பயன்படுத்தாமல் இருந்தால் தானாகவே கணினியானது Sleep mode க்கு சென்று விடும். இதனை நாம் விருப்பபடி மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். பெரிய கோப்புகளை இணையத்தில் இருந்து நாம் பதிவிறக்க அதிகம் நேரம் ஆகும். அது போன்ற சமயங்களில் நாம் மானிட்டரை ஆப் செய்துவிட்டு சென்றுவிடுவோம். வந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே டவுண்லோட் ஆகி இருக்கும் காரணம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கணிப்பொறியானது Sleep mode ற்கு சென்று விடும். இதனால் இதுபோன்ற பல பிரச்சினைகள் எழும். இதனை நம்து விருப்பபடி மாற்றிக்கொள்ள முடியும்.

இதனை மாற்ற முதலில் ஒப்பன் Control panel யை செய்ய வேண்டும். பின் அதில் View By என்பதில் Large Icons என்பதை தேர்வு செய்யவும்.


அதில் Power options என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Balanced என்ற ரேடியோ பொத்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அதில் Change plan settings என்பதை கிளிக் செய்யவும்.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Put the computer to sleep என்ற தேர்வினை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான நேர அளவினை தேர்வு செய்துகொண்டு சேவ் செய்து கொள்ள வேண்டும். அதில் Never என்ற ஆப்ஷன் தேர்வு செய்தால் முழுவதுமாக கணிப்பொறி அனையாமல் இருக்கும்.

0 Comments:

Post a Comment