தமிழில் கணினி செய்திகள்

ஆன்லைனில் QR - கோடினை உருவாக்க

♠ Posted by Kumaresan R in , at 3:03 PM
QR கோடு என்பது (Quick Response Code) , பார் கோடின் அடுத்த தலைமுறை என்றுதான் கூற வேண்டும். இந்த கோடானது மேட்ரிக்ஸ் பார்மெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த QR கோட்டினை மேட்ரிக்ஸ் பார்கோடு என்றும் டு டைமன்ஸ்னல் பார்கோடு என்றும் கூறுவர். இந்த QR கோடு பெரும்பாலும் இணைய முகவரி, முகவரி, போன் நம்பர் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றை இந்த QR கோட்டில் செய்திகளை சுருக்கமாக உள்ளடத்து வைத்து பின் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

QR கோடு ஸ்கேனர்கள் பெரும்பாலும் தற்போது ஸ்மார்ட் போன்களில் பரவலாக காணப்படுகிறது. விண்டோஸ் இயங்குதளத்திற்கும் QR கோடு ஸ்கேனர்கள் உள்ளது.

நம்முடைய வலைபூ, வலைமனை, முகவரி, தொலைபேசி எண் மற்றும் கூப்பன்களுக்கு எளிதாக QR கோடினை உருவாக்க முடியும். இதனை இணையத்தின் உதவியுடன் ஆன்லைனிலேயே உருவாக்க முடியும். இதற்கு உதவி செய்யும் முதன்மையான தளங்கள்.

  1. QR Code Generator
  2. QR Stuff.com
  3. qrcode generator.de
  4. GOQR.ME
மேலே குறிப்பிட்ட தளங்களுக்கு சென்று எளிதாக QR கோடினை உருவாக்க முடியும்.

இணையத்தின் உதவியுடன் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, எதற்கான QR கோடு வேண்டுமோ அதனை தேர்வு செய்து பின் குறிப்பிட்ட தகவலினை உள்ளிடவும். பின் QR கோடினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

0 comments:

Post a Comment