♠ Posted by Kumaresan Rajendran in Conversion,ஆன்லைன் at July 07, 2013
ஆன்லைனில் அப்ளிகேஷன்கள் நிரப்பும் போது போட்டோ மற்றும் கையெழுத்தினை கூடவே தரவேற்றம் செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறு இணையத்தில் பதிவேற்றம் செய்யும் போட்டோ மற்றும் கையெப்பம் இரண்டும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். அளவில் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ இருப்பின், ஆன்லைனில் நிரப்பும் அப்ளிகேஷன் தடைபடவும் வாய்ப்புண்டு. இணைய அப்ளிகேஷன்கள் தடைபடாமல் இருக்க நாம் சரியான அளவில் போட்டோக்களை தரவேற்றம் செய்தல் வேண்டும். போட்டோக்களின் அளவை முறையாக மாற்றியமைக்க ஒரு சில மென்பொருள்கள் வழிவகை செய்கிறன. ஆனால் அனைவராலும் மென்பொருள்களை விலைகொடுத்து வாங்க முடியாது. அதற்கு பதிலாக இணையத்தின் உதவியுடன் போட்டகளின் அளவை குறைக்க முடியும். இதற்கு ஒரு சில தளங்கள் உதவி செய்கிறன. அவற்றில் முதன்மையான தளங்கள்.
சுட்டிகள்
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று , குறிப்பிட்ட படத்தினை தேர்வு செய்யவும். சிறிது நேரத்தில் படமானது தரவேற்றம் செய்யப்படும். பின் குறிப்பிட்ட அளவினை குறிப்பிடவும், அல்லது பிக்சல் அளவுகளை தேர்வு செய்யவும். பின் இறுதியாக Convert பொத்தானை அழுத்தி படத்தை சேமித்துக்கொள்ளவும்.
2 Comments:
Web Resizer பயன்படுத்துகிறேன்... மற்றவை புதிது... நன்றி...
Thanks. Useful Article
Post a Comment