♠ Posted by Kumaresan Rajendran in Mozila Firefox,Tips at April 06, 2011
நெருப்புநரி உலவியில் பணியாற்றும் போது எதோ ஒரு சில காரணத்தால் கிராஷ் ஆகி மீண்டும் மறுதொடக்கம் ஆகும். அப்போது முன்பு பார்த்துகொண்டிருந்த வலைப்பக்கங்களை மீண்டும் ரீஸ்டோர் செய்யவா இல்லை புதிய பக்கத்தை விண்டோவினை திறக்கவா போன்ற செய்திகள் தோன்றும். இந்த வசதியானது நாம் எதாவது ஒரு முக்கியமான வலைப்பக்கத்தை பார்த்து கொண்டிருப்போம். ஆனால் ஒரு சில தவறால் நெருப்புநரி உலவியானது மூடப்படும். அப்போது அந்த தளத்தை நாம் எவ்வாறு பெறுவது, இப்போதுதான் முதல்முறையாக அந்த தளத்தை பார்வையிடுகிறோம் என்றால் என்ன செய்வது, ஹிஸ்டரியில் இருக்கும் என்று சென்று பார்த்தால் அங்கும் நம்முடைய கெட்டகாலம் விட்டு வைக்காது, நாம் பார்த்த வலைப்பக்கத்திற்கான அடையாளமே இருக்காது. ஆனால் நெருப்புநரி உலவியில் உள்ள ரீஸ்டோர் ஆப்ஷனை பயன்படுத்தி மீண்டும் இழந்த வலைப்பக்கத்தை மீட்டுவிட முடியும். ஒரு சில நேரங்களில் மீண்டும் நெருப்புநரி உலவியை மறுதொடக்கம் செய்யும் போதே இந்த ரீஸ்டோர் ஆப்ஷன் கேட்கும், அவ்வாறு கேட்காத போது நாமே இந்த ரீஸ்டோர் ஆப்ஷனை உருவாக்கி கொள்ள முடியும்.
நெருப்புநரி உலவியை திறந்து அட்ரஸ் பாரில் about:sessionrestore என்று தட்டச்சு செய்து, ஒகே செய்யவும். இப்போது நீங்கள் முன்பு திறந்து இருந்த அனைத்து விண்டோக்களை ரீஸ்டோர் செய்யவா, இல்லை புதிய விண்டோவினை திறக்கவா என்ற செய்தி தோன்றும். அதை பயன்படுத்தி மீண்டும் பழைய இணைய பக்கங்களை பெற முடியும்.
இந்த வசதியானது பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும். மிக முக்கியமான சூழ்நிலையில் கைகொடுக்கும்.
0 Comments:
Post a Comment