♠ Posted by Kumaresan Rajendran in ஆன்லைன் at April 23, 2011
இணையத்தில் அடி எடுத்து வைத்தவுடனே முதலில் இணைய பயனாளர்கள் கற்றுக்கொள்வது என்னவெனில் சாட்டிங் செய்ய மட்டுமே ஆகும். பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கிறனர். முக்கியமான தருணங்களில் அரட்டைகளில் ஈடுபடுவது சாதரண செயல் ஆகும். ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள். அவர்கள் சாப்பிடாமல் வேண்டுமானாலும் இருப்பார்கள் ஆனால் அரட்டையில் ஈடுபடாமல் மட்டும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இணையத்திற்கு தினமும் செல்வார்கள் ஆனால் அவர்கள் செய்யக்கூடிய ஒரே செயல் அரட்டை அடிக்கும் செயல் மட்டுமே ஆகும். இதனால் பணம் மட்டுமே செலவாகும். இதுபோன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள் உதாரணாமாக யாகூ, ஸ்கைப், எம்.எஸ்.என், ஜிடால்க் மற்றும் பல இணைய அரட்டைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள் இதுபோன்ற பயனார்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும். நண்பர்களின் கணினியிலேயோ இல்லை ப்ரெளசிங் சென்டரிலேயோ இணைய அரட்டையில் ஈடுபட வேண்டுமெனில் அதற்கு நாம் தேடும் இணைய அரட்டை மென்பொருள் வேண்டும். ஒரு சில கணினியில் Limit பயனர் கணக்கில் பனியாற்றுவோம் அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒருதளம் உதவி செய்கிறது.
தளத்திற்கான சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய இணைய அரட்டை நிறுவனத்தை தேர்வு செய்து கொண்டு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்ளவும். பின் நீங்கள் விரும்பிய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட முடியும். வீடியோ மற்றும் ஆடியோ அரட்டையிலும் ஈடுபட முடியும். மொத்தத்தில் அரட்டை அடிக்க சிறப்பானதொரு தளம் இதுவாகும். நாம் இனி தனித்தனி மென்பொருள்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டு அனைத்து வசதிகளையும் பெற முடியும்.
2 Comments:
பயனுள்ள தகவல்
எனது வலைத்தளத்தில்
YOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிறக்கம் செய்ய
http://mahaa-mahan.blogspot.com/
வருகைக்கு நன்றி தமேஷ்.
Post a Comment