விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை பொறுத்தவரை ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவிய உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை, அந்ததந்த குறிப்பிட்ட ஹார்டுவேர் சாதனங்களுக்கு ஏற்ற ட்ரைவர்களை நிறுவ வேண்டும். குறிப்பிட்ட ட்ரைவர் இருந்தால் பிரச்சினை இல்லை, ட்ரைவர்கள் இல்லாத போதுதான் நமக்கு பிரச்சினை ஆரம்பம். நண்பர்களிடம் ட்ரைவர்களை வாங்கி இன்ஸ்டால் செய்வோம், இல்லையெனில் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை பதிவிறக்கம் செய்து கணினியில் பதிந்து கொள்ள வேண்டும். சரி ஒரு வழியாக ட்ரைவர்களை இன்ஸ்டால் செய்து முடிந்தாகி விட்டது. நாம் இன்ஸ்டால் செய்திருக்கும் ட்ரைவர்கள் பழைய வெர்சனாக இருப்பின் கணினியில் செயல்பாடு மந்தமாக இருக்கும். இந்த சூழ்நிலையை சமாளிக்க நம் கண்னியில் நிறுவப்பட்டிருக்கும் ட்ரைவர்களை அப்டேட் செய்ய வேண்டும். இந்த ட்ரைவர்களை அப்டேட் செய்ய நாம் புதியதாக ட்ரைவர்களை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Scan Now என்ற பொத்தானை அழுத்தவும். ஒரு சில மணி நேரங்களில் உங்களுடைய கணினியானது சோதிக்கப்பட்டு, முடிவுகள் தெரியவரும்.
பின் உங்கள் விருப்பபடி வேண்டிய ட்ரைவர்களை அப்டேட் செய்து கொள்ள முடியும். இதனால் உங்களுடைய கணினியானது மிக விரைவாக செயல்பட தொடங்கும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளானது விண்டோஸ் எக்ஸ்பி,2003,விஸ்டா மற்றும் ஏழு (32,64 பிட்) ஆகிய இயங்குதளங்களில் வேலைசெய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் கோடிக்கணக்கான ட்ரைவர்களை அப்டேட் செய்து கொள்ள முடியும். தினமும் புதியபுதிய ட்ரைவர்கள் சந்தையில் வெளிவந்துகொண்டிருக்கிறன. அனைத்து ட்ரைவர்களையும் அப்டேட் செய்து கொள்ள முடியும்.
10 Comments:
இதுவரை எந்த Driver-ருமே நிறுவவில்லை, இணைய இணைப்பும் இல்லை. வேறு இணைய இணைப்புள்ள கணினியின் உதவி மூலம் Driver நிறுவ முடியுமா?
கண்டிப்பாக முடியும். அந்த கணினியில் ட்ரைவர்களை பேக்அப் செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.
http://tamilcomputerinfo.blogspot.com/2010/09/blog-post_05.html
http://tamilcomputerinfo.blogspot.com/2011/03/slimdrivers.html
நீங்கள் கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே ஒரு சில ட்ரைவர்களும் சேர்ந்தே இன்ஸ்டால் ஆகிவிடும். எந்த ட்ரைவருமே இல்லாத கணினி நீங்கள் பயன்படுத்தும் கணினியாக மட்டுமே இருக்கும் நண்பரே.
அதாவது புதிய DELL கணினியை எனது தங்கை மகனுக்கு வாங்கினோம். அவன் Windows Xp பதிந்து கொடுத்தான். நான் கணினி வாங்கியபோது மதர் போர்டு உடன் ஒரு Drivers CD யும் கொடுத்தார்கள், அதில் கிராபிக்ஸ் கார்ட், இணைய இணைப்புக்கான Driver ஒலிக்கான Realtek ஆகியவை இருந்தன. ஆனால் இவனுக்கு அந்த மாதிரி எதுவும் கொடுக்கவில்லை. நான் போய்ப் பார்த்தபோது கிராபிக்ஸ் திருப்தியாக இல்லை, விற்றவனிடம் கேட்டபோது, இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என்றான். ஆனால் அங்கே இணைய இணைப்பும் இல்லை. எனவேதான் உங்களிடம் கேட்டேன்.
அதனால் எந்த பிரச்சினையும் இல்லை நண்பரே, நீங்கள் உங்களுடைய கணினியில் உள்ள ட்ரைவர்களை வேண்டுமானால் நகல் எடுத்து அதனை உங்கள் தங்கை மகனுடைய கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.
http://tamilcomputerinfo.blogspot.com/2010/09/blog-post_05.html
வெவ்வேறு Motherboard- களுக்கு Drivers மாறுபடும், என்று சொல்கிறார்களே, தற்போது நான் Core 2 Duo பயன்படுத்துகிறேன், இதன் Drivers எடுத்து தற்போது வரும் கணினிகளுக்குப் பயன்படுத்த முடியுமா?
நண்பரே உங்கள் தங்கை மகன் பயன்படுத்தும் கணினியுடன் தொடர்புடைய வன்பொருள்கள் யாராவது உங்கள் நண்பர்களின் கணினியுடன் பொருந்தி இருந்தால், அவர்களுடைய கணினியில் இருந்து ட்ரைவர்களை பேக்அப் செய்து மீண்டும் அதை உங்கள் தங்கை மகன் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
தாங்களுக்கு இதை கூட சொல்ல வேண்டுமா என்று நினைத்தேன், நீங்கள் சொல்லுடா என்ற பிறகு என்ன பன்றது அதான்.
தகவலுக்கு நன்றி, அவ்வாறே செய்ய முயற்சிக்கிறேன். நான் எனது கணினியில் உபுண்டு பயன்படுத்துகிறேன், எந்த டிரைவர்களும் தேவைப் படுவதில்லை. இதுவரை, மதர் போர்டுடன் கண்டிப்பாக டிரைவர் CD கொடுப்பார்கள் என்று [தப்பாக] நினைத்துவிட்டிருந்தேன். எனக்கு இங்கே இணைய இணைப்பு உள்ளது, ஆகையால் அந்த மதர் போர்டு எண்ணைக் கொண்டு என்னென்ன டிரைவர்கள் வேண்டுமோ அதை டவுன்லோடு செய்து ஊருக்குச் சென்று நிறுவ முடியுமா என்று நினைத்து தங்களிடம் விளக்கங்கள் கேட்டேன். சிரமம் கொடுத்திருந்தால் மன்னிக்கவும். எனக்கும் உங்களைப் போலவே சொல்லிக் கொடுக்கும் போது புரியாதவர்களைக் கண்டால் கடும் கோபம் வரும், [இப்போது நினைக்கிறேன், குறைத்துக் கொள்ள வேண்டுமென்று!!] அது இயல்புதானே. அதையும் தாண்டி கோபம் கொள்ளாமல் பொறுமையைச் சொல்லித் தரும் ஆசிரியர்களை பாராட்டித்தான் ஆக வேண்டும்!! நன்றி நண்பரே.
இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். அந்தப் பையன் இருப்பது எங்கள் சிறிய ஊர். நாலஞ்சு பேர்கிட்டத்தான் கணினியே இருக்கிறது, அவங்கவங்க ஏதோ ஒரு கடைக்குப் போயி, ஏதோ ஒரு கணினியை வாங்கி வந்து பயன் படுத்துகிறார்கள். அதனால் அதே மாதிரி கணினியை கண்டுபிடிப்பது கடினம். அந்த மதர் போர்டின் எண்ணைப் பார்த்து முடிந்தால் டவுன்லோடு பண்ணி நிறுவுகிறேன். கோபம் கொள்ள வேண்டாம் நண்பரே. விஷயம் தெரியாதவர்களைப் பார்த்து பரிவு கொள்ளுங்களேன்!!
நண்பரே நான் கோபபடவில்லை, நீங்கள் என்னை தவறாக நினைக்கிறீர்கள், தாங்கள் கூறுவதுபோல இருந்தால் நான் இந்த வலைப்பூவையே நிறுவியிருக்க மாட்டேன்.
கணினியை பற்றி தமிழ் செய்திகள் மிகக்குறைவு, எனவே தமிழில் அனைத்து கணினி செய்திகளும் கிடைக்கபெற வேண்டும் என்பதே இந்த வலைப்பூவின் நோக்கம் ஆகும்.
மேலும் தாங்கள் குறிப்பிட்ட ட்ரைவர் கிடைக்க வில்லையென்றால் கூறுங்கள், நான் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்.மேலும் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிடுகள். எந்த வகையான ட்ரைவர் உங்களுக்கு வேண்டும் என்பதையும் தெளிவாக குறிப்பிடவும்.
நண்பரே,
என்னுடைய கணிணியில் (வின்டோ 7) முன்னர் கண்ணாடி (ட்ரன்ஸ்பரன்ட்) போன்ற தோற்றம் கிடைத்துவந்தது, தற்பொது அப்படி வருவதில்லை. சோதித்துப்பார்த்ததில் டிரைவர் இல்லை என செய்தி வந்தது. விண்டோ 7 தகட்டிலிருந்து இன்ஸ்டால் ஆகவில்லை. இந்த டிரைவர் எங்கு கிடைக்கும்? சுட்டி தரலாமா?
Post a Comment