தமிழில் கணினி செய்திகள்

கணினியில் உள்ள இணையத்தை மொபைல்போனில் பகிர்ந்துகொள்ள

♠ Posted by Kumaresan Rajendran in ,, at March 24, 2013
சில தினங்களுங்கு முன் ஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டு கணினியில் இணையத்தை இணைப்பது எவ்வாறு என்று பார்த்தோம். அந்த பதிவின் பின்னூட்டத்தில் வாசகர் ஒருவர் கணினியில் உள்ள இணையத்தொடர்பை ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் பயன்படுத்த முடியுமா என வினா எழுப்பினார் இதோ அதற்கான பதில்.

கணினியில் இருக்கும் இணையத்தை மொபைல் போனில் பயன்படுத்த முடியுமா என்றால் முடியும். அதற்கு நாம் பயன்படுத்தும் கணினியிலும் மொபைல் போனிலும் Wifi வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் கணினியில் உள்ள இணையத்தை நாம் எளிதாக மொபைல் போனில் இணைக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நெட்வோர்க் சேரிங்கை வைத்து இணைக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே மூன்றாம்தர மென்பொருளின் உதவியுடன் இணைய இணைப்பினை மொபைல் போனுடன் இணைக்கும் போது எந்தவித பிரச்சினையும் இன்றி இணையம் இணைக்கப்படுகிறது.

முதலில் நம்முடைய கணினியில் இணைய இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும். ஈத்தர்நெட் இணைப்பு அல்லது டேட்டா கார்டு கொண்டு கணினியில் இணையத்தை ஏற்படுத்திக்கொள்ளவும். நான் ஈத்தர்நெட் வழியாக கணினியில் இணைய இணைப்பினை ஏற்படுத்தி உள்ளேன். 

அடுத்து mhotspot என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கி கணினியில் நிறுவவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். 


தோன்றும் விண்டோவில் Hotspot Name என்பதில் Wifi பெயரை உள்ளிடவும், பின்  கடவுச்சொல்லை உள்ளிடவும். அடுத்து Share From என்பதில் நீங்கள் பகிர இருக்கும் நெட்வோர்க்கினை தேர்ந்தெடுக்கவும். நான் ஈத்தர்நெட் வழியாக இணைய இணைப்பினை ஏற்படுத்தி உள்ளேன். எனவே Local Area Connection 2 என்பதை தெரிவு செய்துள்ளேன். நீங்கள் வேறு வழியில் கணினியுடன் இணையத்தை ஏற்படுத்தி இருந்தால் அதனை தெரிவு செய்து கொள்ளவும். அதிகபட்சமாக எத்தனை கணினி மற்றும் மொபைல் போனுடன் இந்த இணைய இணைப்பினை பகிர இருக்கிறீர்களோ அதனை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Start Hotspot என்னும் பொத்தானை கிளிக் செய்யவும்.


தற்போது முழுமையாக Hotspot உருவாக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு செய்தி வரும். 



அடுத்து டாஸ்க்பாரில் உள்ள இணைய இணைப்பு ஐகானை கிளிக் செய்து பாருங்கள் நீங்கள் உருவாக்கிய பெயரில் இணைய இணைப்பு பகிர்தலுக்கான ஐகான் உருவாக்கப்பட்டு இருக்கும். கணினியில் வேலை முடிந்து அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது மொபைல் போனில் தான்.

மொபைல் போனில் Wifi ஆன் செய்து விட்டு, Wifi இணைப்பு இருக்கிறதா என தேடிப்பாருங்கள் நீங்கள் உருவாக்கிய பெயரில் இணைய பகிர்தலுக்கான இணைப்பு வரும் அதை தேர்வு செய்யும் போது கடவுச்சொல் கேட்கும். நீங்கள் கணினியில் உள்ளிட்ட கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே செய்யவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது இணையம் மொபைல் போனில் இணைக்கப்பட்டுவிடும். 

கணினியில் உள்ள இணையத்தை கொண்டு ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் இணையத்தை இணைப்பது எவ்வாறு என்று பார்ப்போம்.

கணினியில் Wifi ஆன்செய்யவும். பின் மொபைல் போனில் Settings செல்லவும்.


பின் Wireless & networks என்பதை தெரிவு செய்யவும்.


பின் Wi-Fi ஆன் செய்யவும்.


பின் Wi-Settings செல்லவும். அதில் நீங்கள் கணினியில் உருவாக்கிய பெயரில் Wifi பகிர்தல் இணைப்பு தோன்றும். அதை தெரிவு செய்யவும்.


பின் கணினியில் இணைப்பு உருவாக்கும் போது உள்ளிட்ட கடவுச்சொல்லை இங்கு உள்ளிட்டு Connect  பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவுதான் இப்போது இணையம் மொபைல் போனில் இணைக்கப்பட்டு விடும்.





தற்போது நீங்கள் உங்களுடைய மொபைல் போனில் உள்ள உலாவியை பயன்படுத்தி இணைய பக்கங்களில் வலம் வர முடியும்.

11 Comments:

நீங்கள் சொன்னபடி Wi fi-க்கு பெயர் கொடுத்து விட்டு Start Hotspot-ஐ க்ளிக் செய்தால் "Driver problem found. Please wait while mHotspot fixes it.." என்று காண்பிக்கிறது. ok கொடுத்தால் "Driver Restored, please restart your computer for the changes to be applied" என்று காண்பிக்கிறது. ஆனால் எத்தனை முறை செய்தாலும் மீண்டும் மீண்டும் அதே போல் வருகிறது.. என்ன செய்வது?

Wi-fi இல்லாத symbian S60v5 போன்களில் கணிணியிலிருந்து இணைய இணைப்பு பெற எதாவது வழிமுறை இருந்தால் பதிவிடுங்களேன். மிகவும் உபயோகமாக இருக்கும்.

//yeskha

உங்கள் கணினியில் Wifi ட்ரைவர் இன்ஸ்டால் செய்யப்படவில்லையென்று நினைக்கிறேன். அதை சரிபார்த்து இன்ஸ்டால் செய்யுங்கள்.

மிகவும் உபயோகமான விஷயம்... நன்றி...!

மிகவும் உபயோகமான விஷயம்... நன்றி...!

எனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து இந்த பதிவினை வெளியிட்டமைக்கு மிகுந்த நன்றி.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

nice nanba laptop la wifi connection illai device eathum ullath..wifi connection

I HAVE NETCONNECTION IN MY COMPUTER THROUGH NORMAL MODEM WITHOUT WI FI.
IS IT POSSIBLE TO CONNECT MY ANDROID MOBILE TO USE THE NET CONNECTION OF MY COMPUTER ?

windows Xp யில் இது work ஆக வில்லை .

அன்பு நண்பருக்கு வணக்கம்.எனது டெல் இன்ஸ்பையர் 5110 64 பிட் 3 ஜிபி மெமரி
320 ஜிபி அளவு கொண்ட மடிக்கணிணியில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறேன்.
இதனுடன் மேலும் ஒரு விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்வது எப்படி என ஒரு பதிவு தயவுசெய்து தரவும்.
நன்றி வணக்கம்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்


http://www.thewindowsclub.com என்ற தளத்தில் கீழே உள்ளவைகளைப் படித்தேன்.என்னால் முழுமையாக படித்து புரிந்துகொள்ள இயலவில்லை.ஆதலால் இதனை தமிழில் தர இயலுமா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Discussion: Best Free Antivirus for Windows for 2013
Speed Up My PC

There was a time when computer users did not have to worry about virus & malware. They simply booted their computer and started working on MS-DOS or Linux. As the operating systems got more complex, chances of leaving out “holes” increased and these are now used by many to access and play with your data. If you are a Windows user, do not imagine computing without a good antivirus. Windows being the most popular operating system, everyone wants to target it!

You may have already read our post on the recommended free antivirus software for Windows. This post lists some of the best free antivirus for Windows 7 for the year 2013.

Rather than simply presenting a list antivirus, we also discuss the types of antimalware in market and ask that you give your opinion in the comments section, for the benefit of others.

Top 5 free antivirus for windows 7 2013 400x296 Discussion: Best Free Antivirus for Windows for 2013

The properties and processes of antivirus keep on changing based on the type of malware being introduced into the computing space. Hence, we too need to keep a tab on what antivirus can help you prevent maximum possible disaster, instead of just sticking to one antivirus for years. This post about top 5 antivirus for 2013 is based on research across the different companies keeping tab over antivirus performance, like AV Comparatives and Independent Tests for AV.

There was a time when you had antivirus software for detecting virus, anti-spyware for detecting spyware, adware, etc. But this is not the case now. Most antivirus or anti-malware will detect all kinds of malware including, virus, spyware, adware, Trojans, etc. For best protection, you need to have something that gives you cover against all types of malware. I picked up few of the best antimalware that not only act against virus but also against spyware, rootkits, adware, Trojans, etc.

In addition to antivirus software which gives you full real-time protection, there are antimalware software that do not provide you with ongoing protection. These are called the standalone on-demand antivirus scanners. You need these software, in case your current full-time antivirus is not able to detect any malware and the system is behaving weirdly. These are one-time scan-and-fix antimalware. Once the malware is off your computer, you can remove these and continue with a better antivirus, so that it is not infected again.

Among the best one-time use antimalware quoted by many websites are Microsoft Safety Scanner, Emsisoft Anti-Malware and MalwareBytes Free. If you feel you have a virus on your computer or you see Adware that is not removed by your current antivirus, you can use one of these standalone on-demand antivirus scanners for a one-time download & scan, to fix the computer. Note that it won’t keep on running as a process after it is done removing the malware present on your computer, so you will need a good full antivirus to protect your computer. In case you want to opt in for an online scan, you can choose any one of these good online malware scanners. Why Microsoft does not have one, we fail to understand. The Windows Club always felt that Microsoft too should launch an Online Malware Scanner.

Post a Comment