தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 8 ல் புதிய வசதி - படத்தினை கொண்டு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் உருவாக்குதல்

♠ Posted by Kumaresan R in , at March 04, 2013
இதற்கு முன் இருந்த விண்டோஸ் இயங்குதளங்களில் எல்லாம் சாதாரணமாக பயனர் கணக்கினை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டுமெனில் கடவுச்சொல்லை கொண்டு பயனர் கணக்கினை காப்போம். அதற்கும் மேலாக என்ன செய்வோம் என்றால் ஒலியினை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவோம். ஒரு சிலர் மூன்றாம் தர Face Recognition மென்பொருளை பயன்படுத்தி விண்டோஸ் பயனர் கணக்கினை அடைப்போம். தற்போது விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு கடவுச்சொல்லை உருவாக்க வசதி உள்ளது அதனை எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம். 

முதலில் உங்களுடைய விண்டோஸ் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை வழக்கம் போல் அதே முறைமையை பயன்படுத்தி உருவாக்கி கொள்ளவும். பின் Control Panel யை ஒப்பன் செய்யவும்.


அதில் User Accounts னை கிளிக் செய்யவும். அடுத்ததாக ஒப்பன் ஆகும் விண்டோவில் Make changes to my account in PC settings என்பதை கிளிக் செய்யவும்.


பின் அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Create a picture password என்ற பொத்தானை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Choose picture என்ற பட்டியை அழுத்தி விருப்பமான படத்தை தேர்வு செய்யவும்.

பின் அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Use this picture என்னும் பட்டியை அழுத்தவும். அதில் மூன்று அடையாளங்களை உருவாக்கி கொள்ள முடியும். குறிப்பிட்ட படத்தில் மூன்று இடங்களில் கிளிக் செய்யலாம் , இல்லையெனில் ட்ராக் செய்து விசை குறியீடுகளை உருவாக்கலாம் எப்படி வேண்டுமோ விருப்பபடி இந்த கடவுச்சொல்லை உருவாக்க முடியும். மீண்டும் ஒருமுறை கடவுச்சொல்லை உள்ளிடவும்.

இரண்டு முறை தொடர்ந்து ஒரே மாதிரியாக கடவுச்சொல்லை உள்ளிடவும். அப்போது Start Over 1 2 3 என்று வரிசையாக காட்டும். அதற்கேற்ப கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ள முடியும்.


தற்போது கடவுச்சொல் உருவாக்கப்பட்டு விட்டது Finish பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் அனைத்து விண்டோவையும் மூடிவிட்டு கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்யவும் தற்போது அந்த படத்தினை கொண்டு கடவுச்சொல் உள்ளிடுமாறு தோன்றும். இவ்வாறு படத்தினை கொண்டு உருவாக்கப்படும் கடவுச்சொல் மறந்தாலும் சாதரணமாக உருவாக்கிய கடவுச்சொல்லை கொண்டும் பயனர் கணக்கில் நுழையலாம்.

0 comments:

Post a Comment