தமிழில் கணினி செய்திகள்

நெருப்புநரி உலாவியின் பெயரை மாற்றம் செய்ய

♠ Posted by Kumaresan R in at 12:22 PM
கடந்த மூன்று பதிவுகளுக்கு முன்பு இண்டர்நெட் எக்புளோரர் உலாவியின் பெயரை எவ்வாறு மாற்றம் செய்வது என்று பார்த்தோம். தற்போது நெருப்புநரி உலாவியின் பெயரை எவ்வாறு மாற்றம் செய்வது என்று பார்க்க போகிறோம். நெருப்புநரி உலாவியை பற்றி அதிகம் கூற வேண்டியது இல்லை என நினைக்கிறேன், ஏனெனில் இணைய பயன்பாட்டாளர்கள் பெரும்பாலானோரால் பயன்படுத்தபடுவது இந்த நெருப்புநரி உலாவி ஆகும். உச்சத்தில் இருந்த தனது போட்டியாளரான இண்டர்நெட் எக்ஸ்புளோரரை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறியது நெருப்புநரி உலாவி ஆகும். இதற்கு மிக முக்கியமான காரணம் மற்ற உலவிகளை காட்டிலும் வேகம் அதிகம் உள்ளது. மேலும் தேவைக்கு அதிகமான Add-ons உள்ளது. இதனை பயன்படுத்தி தேவையான அனைத்து பயன்பாடுகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த Add-ons  யை பயன்படுத்திதான் விண்டோ தலைப்பினை மாற்றம் செய்ய போகிறோம்.

Add-ons யை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, குறிப்பிட்ட Nightly Tester Tools என்ற Add-ons யை நெருப்புநரி உலாவியில் இணைத்துக்கொள்ளவும்.  பின் Tools -> Nightly Tester Tools -> Customize Titlebar என்ற வரிசையில் தேர்வு செய்யவும். 


பின் வரும் விண்டோவில் விருப்பமான பெயரை உள்ளிடவும். நான் TCINFO என்று உள்ளிட்டுள்ளேன்.


பின் OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவு தான் வேலை முடிந்தது தற்போது நெருப்புநரி உலாவியின் பெயர் மாற்றப்பட்டிருக்கும். மீண்டும் நெருப்புநரி பெயரை இருப்பு நிலைக்கு கொண்டு வர  ${DefaultTitle} என்று உள்ளிட்டால் போதும்.


மாற்றப்பட்டுள்ள நெருப்புநரி உலாவியின் தலைப்பினை மேலே உள்ள படத்தில் காணலாம். மேலும் இந்த Nightly Tester Tools னை கொண்டு ஸ்கிரின்சாட் மற்றும் BuildNumber போன்றவைகளையும் அறிந்து கொள்ள முடியும்.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பெயரை மாற்ற சுட்டி

1 comments:

Post a Comment