தமிழில் கணினி செய்திகள்

கூகுள் லோகோவினை மாற்றம் செய்ய - நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan R in , at 3:38 PM
நண்பர் ஒருவருடைய வேண்டுகோளுக்கினங்க இந்த பதிவு. இந்த பதிப்பானது பலருக்கும் தெரிந்திருக்கலாம், எனினும் புதியவர்களுக்காக இந்த பதிவு. சில தினங்களுக்கு முன்பு எனக்கு ஒரு ஈ-மெயில் வந்தது அதில் கூகுள் லோகோவினை எவ்வாறு நம்முடைய விருப்பப்படி மாற்றிஅமைப்பது என்று, ஒரு நண்பர் ஒருவர் கேட்டிருந்தார், அவருக்காகவும் மற்ற புதிய கணினி பயனாளருக்காகவும் இந்த பதிவு. கூகுள் லோகோவினை மாற்றம் செய்ய முதலில் பயர்பாக்ஸ் நீட்சியை நிறுவ வேண்டும். பின்னர் Script-னை நிறுவ வேண்டும்.

நெருப்புநரி உளவிக்கான நீட்சியை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுகவும். Script-னை நிறுவ இங்கு கிளிக் செய்யவும்.

நெருப்புநரி உளவிக்கான நீட்சி
Scrip பதிவிறக்கம் செய்ய சுட்டிபின் ஒரு நெருப்புநரி உளவியினை மறுதொடக்கம் (Restart) செய்யவும். பின் உளவியினை திறந்து www.google.com, www.google.co.in என உள்ளிடவும். தற்போது வரும் விண்டோவில் கூகுள் லோகோ மீது டபுள் கிளிக் செய்து, தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான பெயரை உள்ளிட்டு ஒகே செய்யவும். வேண்டுமெனில் கலருக்கான கோடினையும் உள்ளீடு செய்து ஒகே பொத்தானை அழுத்தவும்.

இப்போது நீங்கள் விரும்பிய பெயரை உள்ளிட்டு, பின் கலரையும் குறிப்பிட்டுவிட்டு பின் Change என்ற பொத்தானை அழுத்தவும்.மாற்றி அமைக்கப்பட்ட கூகுளின் முகப்புபக்கத்தை படத்தில் காணலாம், வேண்டுமெனில் கூகுள் பேக்ரவுண்ட்டையும் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். கூகிளின் இடது பக்கத்தின் ஒரத்தில் தோன்றும் Change background image என்ற ஆப்ஷனை பயன்படுத்தி கூகிளின் பேக்ரவுண்ட் இமேஜ்யையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

1 comments:

இனிய சகோதரர் இரா.குமரேசன் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.
-நன்றி-
இனிய படைப்பு நன்றி சகோதரர் இரா.குமரேசன் அவர்களுக்கு

இனிய வேண்டு கோள்....
இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
Place Visit:
http://valibar.blogspot.in/

Post a Comment