தமிழில் கணினி செய்திகள்

பதிவிறக்கம் செய்யும் போது கோப்புகளின் அளவினை தெரிந்து கொள்ள நெருப்புநரி உளவிக்கான நீட்சி

♠ Posted by Kumaresan R in at 8:00 PM
நெருப்புநரி உளவியினை பயன்படுத்தி இணையத்தில் இருந்து கோப்பினை பதிவிறக்கம் செய்யும் போது, சாதரணமாக கோப்பினை சேவ் செய்யட்டுமா அல்லது ஒப்பன் செய்யட்டுமா, இது போன்ற செய்தி மட்டுமே வரும். ஆனால் பைலின் அளவு மற்றும் பைல் பார்மெட் போன்ற எந்த ஒரு தகவலும் வராது. இது போன்ற தகவலினை நாம் நெருப்புநரி உளவியினை பயன்படுத்தி இணையத்தில் இருந்து கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் போதே பெற முடியும் இதற்கு ஒரு பயர்பாக்ஸ் நீட்சி உதவுகிறது. இதற்கு முன்னர் நாம் பைலின் தன்மையை பற்றி அறிய வேண்டுமெனில் அதனை நாம் பதிவிறக்கம் செய்த பின்பே அறிய முடியும்.

நீட்சிக்கான தரவிறக்க சுட்டி


இந்த நீட்சியை நெருப்புநரி உளவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். பின் ஒருமுறை நெருப்புநரி உளவியினை மறுதொடக்கம் (Restart) செய்து கொள்ளவும். இப்போது நெருப்புநரி உள்வியை பயன்படுத்தி ஒரு பைலை பதிவிறக்கம் செய்து பாருங்கள், உங்களுக்கு கோப்பினுடைய தன்மைகளை கணினியில் பதிவிறக்கம் செய்ய கூறும் விண்டோவிலேயே உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

இந்த நீட்சியான பயர்பாக்ஸ் 3.5 லிருந்து 4.0 வரை உள்ள உளவிகளில் மட்டுமே செயல்பட கூடியது ஆகும்.

0 comments:

Post a Comment