♠ Posted by Kumaresan Rajendran in Conversion,ஆன்லைன் at January 14, 2011
நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆப்பிஸ்யை மட்டுமே கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். உதாரணமாக எம்.எஸ்.ஆப்பிஸ் மட்டுமே நம்முடைய கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். மற்ற ஆப்பிஸ் மென்பொருள்களை நாம் அதிகமாக பயன்படுத்த மாட்டோம். ஆனால் நம்முடைய நண்பர்கள் ஈ-மெயில் மூலமாக எதாவது ஒரு டாக்குமெண்டை அனுப்பியிருப்பார்கள் நாம் சென்று ஒப்பன் செய்து பார்த்தால் ஒப்பன் ஆகாது, கடைசியில் பார்த்தால் அது ஒப்பன் ஆப்பிஸ், ஸ்டார் ஆப்பிஸ் போன்ற ஆப்பிஸ் மென்பொருகளால் உருவாக்கப்பட்ட டாக்குமெண்டாக இருக்கும்.
ஓப்பன் செய்து பார்த்தால் ஒப்பன் ஆகாது, என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அந்த பைலானது ஒப்பன் ஆப்பிஸ் மற்றும் ஸ்டார் ஆப்பிஸ் இல்லை வேறு எதாவது ஒரு ஆப்பிஸ் மென்பொருளால் உருவாக்கப்பட்ட டாக்குமெண்டாக இருக்கும். அதை ஒப்பன் செய்ய நாம் பல வழிகளை முயற்சித்து பார்ப்போம் அந்த பைலை எதாவது ஒரு கன்வெர்ட்டர் மூலம் கன்வெர்ட் செய்து விடலாம் என நினைத்து இணையத்தில் ஆராய்து ஒரு மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவினால் அந்த மென்பொருளானது கீ கேட்கும் அந்த நிலையில் நாம் அந்த மென்பொருளை விடுத்து அடுத்த மென்பொருளை நாட வேண்டும் இவ்வாறு இல்லாமல் ஆன்லைனிலேயே வேண்டிய பார்மெட்க்கு கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். டாக்குமெண்ட்களை ஆன்லைனிலேயே கன்வெர்ட் செய்ய உதவுவதுதான் Zoho Viewer.
தளத்திற்கான சுட்டி
இந்த தளத்திற்கு சென்று வேண்டிய பைலை தேர்வு செய்து கொண்டு, எந்த பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டுமோ அதனை உள்ளிட்டு Convert பொத்தானை அழுத்தவும் நீங்கள் குறிப்பிட்ட பார்மெட்டில் டாக்குமெண்ட் டவுண்லோட் ஆகும். இதில் மேலும் ஒரு வசதி என்னவென்றால் டாக்குமெண்டை ஆன்லைனில் இருந்தப்படியே View செய்தும் பார்க முடியும்.
0 Comments:
Post a Comment