தமிழில் கணினி செய்திகள்

பேஸ்புக்கினை பயன்படுத்தி பிடிஎப் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan R in ,,, at January 29, 2011
நாம் இதுவரை பிடிஎப் லைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய பல மென்பொருட்களை பயன்படுத்திவந்தோம், குறிப்பாக PDF Tiger, PDFZilla  போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தியே பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றி வந்தோம், இல்லையெனில் ஆன்லைனில் கன்வெர்ட் செய்வோம். ஒதுவும் ஒரு வகையில் ஆன்லைன் கன்வெர்சனே ஆகும். ஆனால் இந்த ஆன்லைன் கன்வெர்சனானது பிடிஎப் பைலை வேர்ட் பைலாக மாற்றம் செய்ய நாம் பேஸ்புக்கினை நாடி செல்ல வேண்டும். பேஸ்புக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைக்கொண்டு பிடிஎப் பைலை வேர்ட் பைலாக மாற்றிக்கொள்ல முடியும்.

பிடிஎப் பைலை வேர்ட் பைலாக மாற்றம் செய்யும் போது படம் மற்றும் எழுத்துக்களில் ஒரு சில தவறுகளும் தெளிவில்லாமலும் இருக்கும், ஆனால் இந்த பேஸ்புக்கினை பயன்படுத்தி கன்வெர்ட் செய்யும் வேர்ட் பைல்கள் அனைத்துமே மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது, ஆனால் ஒரே ஒரு மைனஸ்பாயின்ட் என்வென்றால் தமிழ் பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக கன்வெர்ட் செய்யும் போது சரியானதாக இல்லை.

பேஸ்புக்  PDF to WORD கன்வெர்ட் சுட்டி


இந்த பேஸ்புக் கன்வெர்ட்டரை பயன்படுத்த வேண்டுமெனில் நம்முடைய பேஸ்புக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு எந்த பிடிஎப் பைலை கன்வெர்ட் செய்யவேண்டுமோ அதை Browse பொத்தானை அழுத்தி செலக்ட் செய்யவும், பின் இணையத்தில் பதிவேற்றம் நடைபெற்று பதிவிறக்க சுட்டி கிடைக்கும், இந்த சுட்டியினை நாம் 24 மணி நேரத்துக்குள் எப்பொழுது வேண்டுமானலும் பயன்படுத்தி டவுண்லோட் செய்துகொள்ள முடியும்.

2 comments:

வாவ்..இப்படிகூட ஒரு வசதி உள்ளதா?? புதுமையான தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே

புதிய தகவல்.. அறிவித்தமைக்கு மிக்க நன்றி! தோழரே..!

Post a Comment