தமிழில் கணினி செய்திகள்

வன்தட்டில் (Hard disk) இருந்து டெலிட் செய்யப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்க

♠ Posted by Kumaresan R in at January 16, 2011
தீடிரென நம்மை அறியாமலையே கணினியில் இருந்து கோப்புகளை நீக்கி விடுவோம். அந்த நிலையில் ரீசைக்கிள் பின்னில் தேடினால் நமக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருக்கும் எந்த ஒரு பைலும் இருக்காது. நம்முடைய கணினியில் எங்கு தேடினாலும் கிடைக்காது. அப்போது ஒரு யோசனை தோன்றும் கணினியை ரீஸ்டோர் செய்தால் டாக்குமெண்ட் கிடைக்கும் என்று, இருப்பினும் ஒருசில சூழ்நிலைகளில் டாக்குமெண்ட் கிடைக்காது. இதுபோன்ற நிலையில் இழந்த கோப்பினை எப்படியாவது மீட்டெடுக்க நினைத்து இணையத்தில் உதவி கேட்போம் ஆனால் அந்த நேரத்தில் சரியான வழிமுறைகள் எதுவும் கிடைக்காது, அதுபோன்ற நிலையில் நம்முடைய கோப்புகளை இழக்க நேரிடும் அவ்வாறு இல்லாமல் இழந்த கோப்புகளை மீட்டெடுக்க அருமையான மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


நீங்கள் எந்த ட்ரைவில் இருந்து கோப்பினை டெலிட் செய்தீர்களோ அதனை தேர்வு செய்து Scan என்னும் பட்டியை தேர்வு செய்யவும். நீங்கள் டெலிட் செய்யப்பட்ட கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் உங்களுக்கு வேண்டிய கோப்பினை தேர்வு செய்து Undelete என்னும் பட்டியை அழுத்தவும் இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் கோப்பானது ரீஸ்டோர் செய்யப்பட்டிருக்கும்.


இழந்த கோப்பானது மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் தோன்றுகிறது. இவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டெடுத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5 comments:

வணக்கம் நண்பரே!
புதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- தமிழ்புக்மார்க் குழு
http://www.tamilookmark.co.cc

(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)

அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி

இந்தத் தகவல் எனக்குப் பயன்படும் .. நன்றிங்க

வருகைக்கு நன்றி,

திரு.தங்கராசு நாகேந்திரன்.,
கோமாளி செல்வா.,
D.,

Post a Comment