வன்தட்டினை (Hard Disk) தனித்தனி பகுதியாக (C: D: E:) போன்று பிரிக்க வேண்டுமெனில், கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நிறுவும் போதே பிரிக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவிய பிறகு வன்தட்டினை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதனை நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினுடைய உதவியுடனே செய்ய முடியும். அவ்வாறு நாம் செய்யும் போது ஒரு சில நேரங்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே பழுதடைய வாய்ப்புண்டு. இல்லை நம்முடைய வன்தட்டினை இழக்க நேரிடும். இதனை தவிர்க்க வேண்டுமெனில் நாம் வேறு மென்பொருளை நாட வேண்டும். இது போன்ற மென்பொருட்கள் அனைத்துமே பணம் செலுத்தி பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் பலவும் நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. Aomei Partition Assistant Professional என்ற மென்பொருளானது இலவசமாக கிடைக்கும்.
இலவச தரவிறக்க சுட்டி
இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய ஈ-மெயில் முகவரியை உள்ளிட்டு Submit பட்டனை அழுத்தவும். பின் உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்கு மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பபடும். அந்த சுட்டியை பயன்படுத்தி மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் வன்தட்டினை Copy, Paste, Format போன்ற செயல்பாடுகளை செய்ய முடியும். இந்த மென்பொருளானது NTFS, FAT பைல் சிஸ்ட்டங்களை ஆதரிக்க கூடியது ஆகும்.
இந்த மென்பொருளின் மதிப்பானது $29.95 ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி ஜனவரி 28 வரை மட்டுமே, என்பது குறிப்பிடதக்கது.
2 Comments:
வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருள் நண்பரே
பகிர்வுக்கு நன்றி
உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...
Post a Comment