தமிழில் கணினி செய்திகள்

பெரிய அளவுடைய கோப்புகளை வெட்ட மற்றும் ஒட்ட

♠ Posted by Kumaresan R in at 10:39 PM
அளவில் மிகப்பெரிய கோப்புகளை மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது இணையத்தில் பரிமாற்றம் செய்து கொள்வதோ அவ்வளவு சாதாரண செயல் இல்லை, இணைய இணைப்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அளவில் மிகப்பெரிய கோப்புகளை பரிமாற்றம் செய்து கொள்வது சாத்தியம், மிகப்பெரிய கோப்புகளை இணையம் வழியே பரிமாற்றம் செய்யும் போது தீடிரென இணையத்தில் கோளாரு ஏற்பட்டு பதிவேற்றமோ அல்லது பதிவிறக்கமோ தடைப்படக்கூடும். ஆனால் அளவில் சிறிய கோப்புகளை விரைவாக பதிவிறக்கம் அல்லது பதிவேற்றமோ செய்து விட முடியும். அதனால் மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பரிமாறிக்கொள்ளும் போது அதனை சுருக்கி அனுப்புவார்கள், அவ்வாறு சுருக்கும் போது மிகப்பெரிய கோப்புகள் அளவினை பெரிதாக சுருக்கிவிட முடியாது. இதற்கு பதிலாக மிகப்பெரிய கோப்புகளை துண்டு துண்டாக வெட்டி இணையத்தில் பகிர்ந்து கொள்ளலாம். பின் மீண்டும் வெட்டிய கோப்புகளை இணைத்து கொள்ள முடியும். அதற்கு File Splitter & Joiner என்ற இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த File Splitter & Joiner அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Splitting என்னும் டேப்பினை தேர்வு செய்யவும். பின் Source File என்னும் வரிசையில் உள்ள பொதியை கிளிக் செய்து பெரிய அளவுடைய கோப்பினை தேர்வு செய்யவும். பின் Output directory என்னும் வரிசையில் உள்ள பொதியை கிளிக் செய்து பிரிக்கப்பட்ட கோப்புகள் சேமிக்கப்பட வேண்டிய இடத்தை குறிப்பிட்டு பின் Split into என்னும் ஆப்ஷன் பட்டனை கிளிக் செய்து வேண்டியவாறு , கோப்பின் அளவிற்கேற்ப அமைத்துக்கொள்ளவும். இல்லையெனில் Split after every என்ற ஆப்ஷன் பட்டனை தேர்வு செய்து அதன் படி பிரிக்கப்பட வேண்டிய கோப்பின் அளவுகளை அமைத்து கொண்டு பின் Split என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் உங்களுடைய கோப்பானது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு இருக்கும்.


பின் பிரித்த கோப்புகளை மீண்டும் இணைக்க அதே மென்பொருளை திறந்து Joining என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் First split part (.001,._a): என்னும் வரிசையில் உள்ள பொதியை அழுத்தி ஒட்டப்பட வேண்டிய கோப்புகளை தேர்வு செய்யவும். பின் Output file: என்னும் வரிசையில் உள்ள பொதியை அழுத்தி ஒட்டப்பட்ட கோப்புகள் சேமிக்கப்பட வேண்டிய இடத்தை குறிப்பிடவும். அடுத்து Split parts are in different locations என்னும் செக்பாக்சை டிக் செய்து பின் Join என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் கோப்பானது சேமிக்கப்பட்டு இருக்கும். பின் தோன்றும் விண்டோவில் Finish என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் கோப்புகள் இணைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வரும். பின் சேர்க்கப்பட்ட கோப்புகளை எடுத்து வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

3 comments:

நிச்சயம் அனைவருக்கும் பயன்படும் பதிவு..

பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Page Maker குறித்து பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்
மிக்க நன்றி

http://valibar.blogspot.in/

http://valibar1.blogspot.in/

jebasinghjohn@yahoo.in

வாழ்த்துக்கள்

பயனுளள தகவல் நன்றி.......
Click here

Post a Comment