♠ Posted by Kumaresan Rajendran in WINDOWS,Winxp-Tutorials at May 07, 2013
விண்டோஸ் இயங்குதளத்தை அப்டேட் செய்த பின் தானகவே மறுதொடக்கம் ஆகும். இவ்வாறு விண்டோஸ் இயங்குதளம் மறுதொடக்கம் ஆகும் போது அதில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த அனைத்து அப்ளிகேஷன்களும் மூடப்பட்டு விடும். ஒரு சில முக்கியமான வேலையில் இருக்கும் போது இப்படி நடந்தால் நம்மை எரிச்சலூட்டும். மேலும் இவ்வாறு மறுதொடக்கம் ஆவது கணினியை வேகத்தை குறைக்கும்.
லினக்ஸ் இயங்குதளத்தில் அப்டேட் ஆன பின் லினக்ஸ் இயங்குதளம் மறுதொடக்கம் ஆகாது, ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை. அப்டேட் ஆன பின் மறுதொடக்கம் ஆகும். இவ்வாறு மறுதொடக்கம் ஆவதை முழுவதுமாக ரத்து செய்ய விண்டோஸ் இயங்குதளத்தில் வழி உள்ளது.
முதலில் விண்டோஸ் மற்றும் R கீகளை ஒருசேர அழுத்தி ரன் விண்டோவினை ஒப்பன் செய்யவும் பின் gpedit.msc என்று உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் விண்டோவில் Computer Configuration\Administrative Templates\Windows Components\Windows Update என்னும் வரிசையில் தேர்வு செய்யவும். Windows Update யை கிளிக் செய்தவுடன் வலதுபுறம் தோன்றும் வரிசையில் No auto-restart with logged on users for scheduled automatic updates installations என்பதை இரட்டை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் என்னும் ஆப்ஷன் பொத்தானை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தவும்.
அவ்வளவு தான் இனி விண்டோஸ் இயங்குதளம் அப்டேட் ஆன பின் தானகவே மறுதொடக்கம் ஆகாது.
4 Comments:
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_8.html) சென்று பார்க்கவும்... நன்றி...
INTEL 2nd generation கொண்ட என்னுடைய சிஸ்டத்தில் windows 8 install செய்ய முடியுமா ?
நட்சத்திர கருத்துரையாளர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி,
மேலும் எமது வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த திவாஜி அவர்களுக்கும் நன்றி,,
//kaliaperumalpuducherryMay
INTEL 2nd generation கொண்ட என்னுடைய சிஸ்டத்தில் windows 8 install செய்ய முடியுமா ?
இன்ஸ்டால் செய்ய முடியும், ஆனால் மந்தமாக செயல்படும்.
Post a Comment