விண்டோஸ் எக்ஸ்பி, ஏழு இயங்குதளத்தில் சாதாரணமாக பூட் ஆகும் போதே F8 கீயை அழுத்தினால் Safe Mode போவதற்கான வழி கிடைக்கும். ஆனால் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை, விண்டோஸ் 8 F8 அழுத்தினால் எந்த வித மாறுதலும் இல்லாமல் சாதாரணமாக பூட் ஆகும். எனினும் விண்டோஸ்8 இயங்குதளத்தை Safe Mode ல் பூட் செய்யவும் வழி இருக்கிறது.
இந்த Safe Mode ல் பூட் செய்வதற்கான அவசியம் என்ன, ஒரு வேலை அழியாத கோப்புகளை அழிக்க வேண்டுமெனில் Safe Mode சென்று முழுமையாக அழித்துவிட முடியும். இயங்குதளம் பூட் ஆகாமல் கோளாரு செய்தாலும் Safe Mode சென்று சரி செய்து கொள்ள முடியும். இது போல் பல்வேறு பிரச்சினைகளை Safe Mode சென்று சரி செய்து கொள்ள முடியும்.
விண்டோஸ் 8 ல் Safe Mode செல்ல , முதலில் விண்டோஸ்கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி ரன் விண்டோவை ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் msconfig என்று தட்டச்சு செய்து OK பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Boot என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் விண்டோஸ் 8 இயங்குதளத்தை தேர்வு செய்து Set as default என்னும் பொத்தானை அழுத்தி இருப்பியல்பு இயங்குதளமாக மாற்றிக்கொள்ளவும். பின் Boot options என்னும் அமைப்பில் Safe boot என்னும் செக் பாக்சை டிக் செய்து OK பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாக கணினி மறுதொடக்கம் ஆகும். மறுதொடக்கம் ஆகும் போது தானாகவே விண்டோஸ்8 இயங்குதளதளம் Safe Mode ல் பூட் ஆகும்.
இதே முறையை பயன்படுத்தி விண்டோஸ் 7 இயங்குதளத்தையும் Safe Mode பூட் செய்ய முடியும்.
2 Comments:
தகவலுக்கு நன்றி நண்பரே ..........
safe mode பற்றி மேலும் தகவல்கள் அளித்தால் நன்றாக இருக்கும்
நான் foldar lock செய்தேன் ஒரு மென்பொருள் உதவியுடன் ,சிறிது நாளுக்கு பிறகு அந்த மென்பொருள் கலாவதி ஆகிவிட்டது .இப்பொழுது lock செய்த போல்டரை திறக்க முடியவில்லை .அந்த போல்டரை எப்படி lock கை உடைத்து திறக்க முடியும் .அந்த போல்டரை delete செய்தலும் பரவாயில்லை . தயவு செய்து எனக்கு உதவு மறு கேட்டுகொள்கிறேன்
Post a Comment