தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இருப்பியல்பு பயனர் கணக்கு மற்றும் கெஸ்ட் பயனர் கணக்கின் படத்தை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,, at May 12, 2013
விண்டோஸ் ஏழு இயங்குதளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக விண்டோஸ் எட்டு இயங்குதளம் உள்ளது. விண்டோஸ் ஏழு இயங்குதளத்தில் கெஸ்ட் மற்றும் பயனர் கணக்கின் படத்தை மாற்ற வேண்டுமெனில் எளிதாக கன்ட்ரோல் பேனல் சென்று மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை, இதில் பயனர் கணக்கின் படத்தை மாற்ற ஒரு சில வேலைகள் செய்ய வேண்டும். 

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் புதிய பயனர் கணக்கினை உருவாக்கும் போது தானாகவே புதிய படத்தினை இயங்குதளம் அமைத்துக்கொள்ளும். அவ்வாறு அமைக்கும் படங்களுக்கு பதில் நமக்கு பிடித்த படங்களை மாற்றிக்கொள்ளலாம். விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இருப்பியல்பு பயனர் கணக்கு மற்றும் கெஸ்ட் பயனர் கணக்கின் படத்தை மாற்ற முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து C: ஒப்பன் செய்யவும். 


பின் View என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் Hidden items என்னும் செக்பாக்சை டிக் செய்யவும். அடுத்து கீழ் காணும் வரிசையில் ஒப்பன் செய்யவும். C:\ ProgramData -> Microsoft -> Default Account Pictures


பின் படங்களை இந்த கோப்பறையில் காப்பி செய்யவும். படங்கள் கீழ்காணும் அளவு, பெயர், பார்மெட்களில் இருத்தல் வேண்டும்.

பயனர் கணக்கு
  • அளவு 200*200, பார்மெட் .PNG, பெயர் user-200.
  • அளவு 40*40, பார்மெட் .PNG, பெயர் user-40.
  • அளவு 448*448, பார்மெட் .PNG, பெயர் user.
  • அளவு 448*448, பார்மெட் .BMP, பெயர் user.

கெஸ்ட் கணக்கு
  • அளவு 448*448, பார்மெட் .PNG, பெயர் guest.
  • அளவு 448*448, பார்மெட் .BMP, பெயர் guest. 


மேலே குறிப்பிட்டுள்ளவாறு படங்களை ஒழுங்குபடுத்தி கொள்ளவும். பின்  அதனை Default Account Pictures என்னும் கோப்பறைக்குள் இந்த படங்களை பேஸ்ட் செய்யவும்.


பின் தோன்றும் விண்டோவில் Continue பொத்தானை அழுத்தி படங்களை முழுயாக காப்பி செய்யவும். பின் கன்ட்ரோல் பேனல் சென்று , User Accounts தேர்வு செய்து பின் Guest பயனர் கணக்கின் படத்தை காணவும். தற்போது Guest பயனர் கணக்கின் படம் மாற்றப்பட்டிருக்கும்.

அடுத்து புதிய பயனர் கணக்குகளை ஒப்பன் செய்யவும். அப்போதும் பயனர் கணக்கின் படமும் மாற்றப்பட்டு வரும்.


அவ்வளவுதான், வேலை முடிந்தது. இதே முறையை பின்பற்றி வேண்டிய படங்களை அமைத்துக்கொள்ள  முடியும்.

3 Comments:

படத்துடன் விளக்கம்... நன்றி...

நண்பா விண்டோஸ் 8 இன்டர்நெட் connect பன்ன முடியவில்லை.. அதற்கு எதாவது எனக்கு உதவ முடயுமா?

hai nanba enaku windows 8 internet connect panna mudiya villai.. ethasum help panna mudiuma?

Post a Comment