தமிழ் கம்ப்யூட்டர்

தமிழில் கணினி செய்திகள்

கிரெடிட் கார்டில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற - பாகம் 2

♠ Posted by Kumaresan Rajendran in ,,

 


இதற்கு முன்னதாக கிரெடிட் கார்டில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற ஒரு பதிவினை இட்டு இருந்தேன். அது CRED ஆப் வழியாக பணத்தை மாற்றுவது ஆகும். தற்போது PhonePe ஆப் வழியாக பணத்தை வங்கி கணக்கிற்கு எவ்வாறு மாற்றுவது என்று ஒரு வீடியோ பதிவினை இட்டுள்ளேன்.


வீடியோ பதினை காண :- https://youtu.be/RVztrxsqCOc



Amazon Pay - ல் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,

Amazon -ல் நாம் எதாவது ஆன்லைன் பண பரிமாற்றம் செய்யும் போது அதற்கு கேஷ்பேக் கிடைக்கும் அது Amazon Pay க்கு தான் வரும். மேலும் எதாவது ஒரு Gift Card னை வைத்து அமேசான் Wallet -ல் Add செய்தாலும் அதுவும் Amazon Pay க்கு தான் வரும்.

இதுபோன்று Amazon Pay -ல் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற அதிகார பூர்வமாக  Amazon Pay - ல் எந்த ஒரு ஆப்சனும் இல்லை, ஆனால்  Amazon Pay - ல் இருக்கும் பணதை வங்கி கணக்கிற்கு மாற்ற  Amazon - ல் ஒரு இரகசிய வழி உள்ளது. அது எவ்வாறு என்பதை பார்ப்போம். 


Amazon gold vault - ஆப்சனை பயன்படுத்தி, ஆன்லைனில் வாங்கி விற்பதன் மூலமாக Amazon Pay - ல் இருக்கும் பணதை வங்கி கணக்கிற்கு மாற்ற முடியும்.

இந்த பதிவினை விடியோ பதிப்பாக காண :- https://youtu.be/PSmf3wkGwpg




JIO - WIFI Dongle Username மற்றும் Password னை மாற்றுவது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,

 தற்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவருமே இணைய இணைப்பினை பயன்படுத்தி வருகிறோம். அதிலும் அதிகமாக பெரும்பாலானோர் தற்போதைய காலகட்டத்தில் JIO - WIFI Dongle னை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். அதில் இருக்கும் Username மற்றும் Password என்பது எளிதில் புரியும்படியாக இருக்காது. இதை மாற்றிக்கொள்வதே மிகச்சிறந்தது. அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

 


 

முதலில் உங்களுடைய ஜியோ Dongle னை பயன்படுத்தி உங்கள் கணினி அல்லது மொபைலில் இணைய இணைப்பினை Connect செய்து கொள்ளவும். பின் http://jiofi.local.html or http://192.168.225.1 இதில் எதாவது ஒரு இணைய முகவரியில் உள்நுழையவும். அடுத்து Login செய்து கொள்ளவும். 

Username :- administrator
Password :- administrator


மேலே கொடுக்கப்பட்ட Username மற்றும் Password னை பயன்படுத்தி உள்நுழையவும். பின் Network டேபினை கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Wi-Fi Configuration என்னும் டேபினை கிளிக் செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் Network Name (SSID) என்று இருக்கும்  Input box ல் உங்களுக்கு பிடித்த Username னை மாற்றிக்கொள்ளவும். அதேபோல் Password அருகில் உள்ள   Input box ல் உங்களுக்கு பிடித்த Password னை மாற்றிக்கொள்ளவும்.

 இந்த பதிவினை விடியோ பதிப்பாக காண :-  https://youtu.be/OY6jay31HzA





விண்டோஸ் 11 இயங்குதளத்தை Install செய்வது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த முக்கிய வெளியீடு விண்டோஸ் 11 இயங்குதளம் ஆகும். விண்டோஸ் 11 இயங்குதளம் இந்த மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இதனுடைய Leak பதிப்பானது தற்போது வெளியாகி உள்ளது இதனை எவ்வாறு கணினியில் நிறுவுவது என்று பார்போம்,


விண்டோஸ் 11 இயங்குதளத்தின் சிறப்பம்சங்கள் :-

முதலாவது  Start Menu , Taskbar மற்றும் search போன்றவைகள் ஆகும். விண்டோஸ் முந்தைய பதிப்புகளில் Start Menu , Left Side இருக்கும், ஆனால் இதில் Center பகுதியில் உள்ளது. மேலும் Taskbar முந்தைய பதிப்புகளை விட சிறப்பாக உள்ளது. Center Start Menu வினை நமது விருப்பபடி மாற்றியமைத்து கொள்ளவும் விண்டோஸ் வளிவகை செய்துள்ளது.

அடுத்தது போல்டர்களை ஒப்பன் செய்யும் போதும் மற்றும் மூடும் போதும் வரும் அனிமேஷன் போன்றை சிறப்பாக உள்ளது.

விண்டோஸ் ஆன் செய்யும் போது வரும் Sound மிகச்சிறப்பாக உள்ளது. விண்டோஸ் 11 இயங்குதளத்தின் போல்டர்கள் நிறம் மிகவும் சிறப்பாக உள்ளது. அதிலும் Dark mode முந்தைய விண்டோஸ் 10 பதிப்பினை விட நன்றாக உள்ளது. இதுபோன்று பல்வேறு சிறப்பம்சங்கள் விண்டோஸ்11 இயங்குதளத்தில் உள்ளது.

விண்டோஸ் 11 Install  செய்வது எவ்வாறு என்பதை வீடியோ வடிவில் Youtube தளத்தில் பதிவேற்றி உள்ளேன். அதனை காண கீழே உள்ள Link னை கிளிக் செய்யவும்.

விடியோ பதிப்பின் முகவரி :-  https://youtu.be/6xmF_B3bMp4

அனுமதி இல்லாமல் யாரும் உங்களை WhatsApp Group-ல் Add செய்ய முடியாது

♠ Posted by Kumaresan Rajendran in

நம்மில் பலரும் தற்போது WhatsApp னை பயன்படுத்தி வருவோம், இதில் நம்முடைய அனுமதி இல்லாமல் WhatsApp குருப்பில் சேர்க்க முடியாது. இதனை எவ்வாறு செயவது என்று பார்போம்.




வீடியோ Link :- https://youtu.be/L-e_Yd024pc



விண்டோஸ் 10 இயங்குதளத்தை Activate செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,

நம்மில் பலர் விண்டோஸ் பயனாளர்களாக தான் இருப்போம். தற்போது விண்டோஸ் இயங்குதளத்தின் பதிப்பான விண்டோஸ் 10 இயங்குதளத்தை எந்த வித மென்பொருள் உதவியும் இல்லாமல் ஆக்டிவேட் செய்ய முடியும். அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.

விண்டோஸ் Activation Link - https://get.msguides.com/windows-10-8.1-8-7.txt

 

windows 10 activate

 

மேலே கொடுக்கப்பட்ட link னை கிளிக் செய்து, வரும் விண்டோவில் இருக்கும் text - னை காப்பி செய்து ஒரு .bat பைலாக save செய்து கொள்ளவும். பின் அந்த பைலை ஒப்பன் செய்யவும். அடுத்த சில வினாடிகளில் உங்களுடைய விண்டோஸ் 10 இயங்குதளம் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும்.


இந்த பதிவினை வீடியோ பதிவாக காண :- https://youtu.be/D7gaeYklK0I





கிரெடிட் கார்டில் இருக்கும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,,,

 

Transfer Money From Credit Card To Bank Account - Cred | Credit Card To Bank | Tamil


கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற CRED என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. இதை பற்றிய முழு விவரங்களும் வீடியோ பதிவாக யூடுப் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன். அதனை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விடியோ பதிவு :-

https://www.youtube.com/watch?v=iiq-DNle9E8



கூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு

♠ Posted by Kumaresan Rajendran in ,
தமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று அறிவித்தது. கடந்த 10 வருடமாக தமிழ் இணையதளம் மற்றும் வலைப்பூக்களுக்கு கூகுள் அட்சென்ஸ் நிராகரிக்கப்பட்டு வந்தது. தற்போது கூகுள் நிறுவனம்  அட்சென்ஸ் சேவையானது  தமிழ் மொழி சார்ந்த இணையதளங்களை ஆதரிக்கும் என கூகுள் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளது. 


மேலும் கூகுள் அட்சென்ஸ் ஆதரிக்கும் மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழி தற்போது இணைக்கப்பட்டு உள்ளது. இது உலக தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வு ஆகும்.


இனிமேல் தமிழ் இணையதளம் மற்றும் வலைப்பூக்கள் வைத்திருக்கும்  அனைவரும் தங்களுடைய தளங்களில் கூகுள் அட்சென்ஸ் வசதியினை இணைத்து கொள்ள முடியும்.

இந்த தகவலினை முடிந்தவரை அனைத்து தமிழ் இணைய நண்பர்களிடம் பகிருங்கள்.

ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள் ஒன்று மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக பேஸ்புக், வாட்ஸ்அப், யூடுப் போன்றவை ஆகும். இதற்கு தீர்வாக Parallel Space என்னும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் இருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக நம்முடைய மொபைல் போனில் அப்ளிகேஷன்களை நகலி (Clone) செய்து பயன்படுத்த முடியும்.

Parallel Space பதிவிறக்கம் செய்ய சுட்டி




இந்த மென்பொருளை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் நீங்கள் நகலி எடுக்க விரும்பும் அப்ளிகேஷன்களை தேர்வு செய்து இறுதியாக Add to Parallel Space என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து தோன்றும் விண்டோவில் நீங்கள் குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை வழக்கம் போல பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Youtube சேனல் முகவரி :- 


வீடியோ பதிவு:- 


Hotstar வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
ஸ்டார் குழும தொலைகாட்சி வீடியோக்கள் அனைத்துமே Hotstar செயலி வழியாகவே தற்போது பயனாளர்களுக்கு பகிரப்படுகிறது. இதனை Offline வீடியோவாக மட்டுமே டவுண்லோட் செய்ய முடியும். அந்த வீடியோக்களை அச்செயளிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த வீடியோக்களை தனியாக பிரித்தெடுக்க முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.

சரி Hotstar வீடியோக்களை கணினி மற்றும் மொபைல் போன்களில் எளிமையாக டவுண்லோட் செய்துவது எவ்வாறு என்று பார்ப்போம் முதலில் கணினியில் எவ்வாறு டவுண்லோட் செய்வது என்று பார்ப்போம். 

கணினியில் வீடியோவினை தரவிறக்கம் செய்ய மென்பொருள் சுட்டி


மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தி  அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை Extract செய்து கொள்ளவும். அடுத்து hotstarlivestreamer என்னும் .batch பைலை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும் வீடியோவின் முகவரியை உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். அடுத்து வீடியோவின் பிக்சல் அளவினை குறிப்பிட்டு  என்டர் பொத்தானை அழுத்தவும். அடுத்து d என்று டைப் செய்து என்டர் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் வீடியோவானது டவுண்லோட் ஆக தொடங்கும். வீடியோவானது டவுண்லோட் ஆனவுடன் நீங்கள் Extract செய்த போல்டர்க்குள்  videos என்ற போல்டர் இருக்கும் அதற்குள் நீங்கள் டவுண்லோட் செய்த வீடியோவானது இருக்கும்.  

அடுத்து மொபைல் போனில் வீடியோவினை தரவிறக்கம் செய்ய Videoder என்னும் மென்பொருள் பயன்படுகிறது. 

Videoder மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மேலே குறிப்பிட்ட சுட்டியை பயன்படுத்தி ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை உங்களுடையை மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். பின் அதனை ஒப்பன் செய்யவும் அதில் Hotstar னை தெரிவு செய்யவும். அடுத்து நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும் வீடியோவினை ஒப்பன் செய்யவும். 


இப்போது டவுண்லோட் செய்வதற்கான சுட்டி உங்களுக்கு கிடைக்கும். அதனை கிளிக் செய்தவுடன் வீடியோவினை எந்த பார்மெட்களில் டவுண்லோட் செய்து கொள்ள முடியுமே அந்த அளவுகள் அனைத்தும் தோன்றும் அதனை பயன்படுத்தி உங்கள் விருப்ப வீடியோ அளவினை தேர்வு செய்து டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.



இப்போது நீங்கள் டவுண்லோட் செய்த வீடியோவானது உங்களுடைய போன் மெமரிக்கு வந்திருக்கும் அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே ஒரே விலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. நாளுக்குநாள் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். மேலும் தள்ளுபடி என்று சொல்லி விற்க்கப்படும் பொருட்களுமே அதிக இலாபத்தில் விற்கப்படும்.

இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபட Buyhatke என்னும் மென்பொருள் பன்படுகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் நீட்சியாகவும், Windows, Android, IOS போன்ற மொபைல் செயலிகளாகவும் கிடைக்கிறது. இது இலவச மென்பொருள் ஆகும்.

கூகுள் குரோம் நீட்சி சுட்டி

Windows மென்பொருள் சுட்டி

Android மென்பொருள் சுட்டி

IOS மென்பொருள் சுட்டி



மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தி கூகுள் குரோம் உலாவியில் நீட்சியை நிறுவிக்கொள்ளவும். இந்த நீட்சியின் மொபைல் அப்ளிகேஷன் சுட்டிகளை மேலே கொடுத்துள்ளேன் அதனை பயன்படுத்தி மொபைல் போன்களின் Buyhatke அப்ளிகேஷனை நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள் Flipkart, Amazon, Myntra, Snapdeal போன்ற தளங்களில் மிகச்சரியாக வேலை செய்கிறது.

உதாரணத்திற்கு Flipkart தளத்தில் எவ்வாறு இந்த Buyhatke நீட்சியை பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

Redmi Note 4 னை எடுத்து கொண்டால் இதன் தற்போதைய விலை ரூபாய் 10,999 ஆகும். இந்த விலை தான் மிக குறைந்த விலையா என்று பார்ப்பதற்கு Buyhatke நீட்சி Graph வசதியினை அளிக்கிறது இதன் மூலம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகைக்கு விற்க்கப்பட்டது என்பதனை மிகதெளிவாக தெரிந்து கொள்ள முடியும். 






மேலும் இந்த நீட்சியானது பல்வேறு வசதிகளை அளிக்கிறது. Watch Price என்னும் ஆப்ஷன் மூலமாக Alert வசதியினை நீங்கள் பெற முடியும். ஒரு பொருளின் விலையினை குறிப்பிட்டு அந்த பொருளின் விலை குறையும் போது அதனை Alert மூலமாக பெற முடியும். பொருட்களை வாங்கும் போது கூப்பன் உள்ளதா என்றும் சரியான கூப்பன்கள் வரிசைபடுத்தப்பட்டு இருக்கும். இதனையும் பயன்படுத்தி பொருட்களை இன்னும் குறைவாக வாங்கி கொள்ள முடியும்.






இதே பொருள் மற்ற வர்த்தக தளங்களில் எவ்வளவு தொகைக்கு விற்க்கப்படுகிறது என்பதையும் ஒரே இடத்தில் இருந்து கொண்டே தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக மற்ற தளங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


Google Business பக்கத்தை உருவாக்குவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
Google Business பக்கம் என்பது, நாம் கூகுள் தேடுபொறியில் சர்ச் செய்யும் போது முகப்பு பகுதியில் Right Side தோன்றும் விவரங்கள் ஆகும். இது மிக முக்கியமான தகவல்களை கொண்டிருக்கும். உதாரணமாக கூகுள் மேப், வேலை செய்யும் நேரம் மற்றும் முகவரி போன்றவைகள் ஆகும்.

இந்த Google Business சேவையினை நம்முடைய அலுவலகத்திற்கோ அல்லது வலைதளம்/வலைப்பூவிற்கோ நாம் எவ்வாறு பெறுவது என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம் இந்த பதிவு அவர்களுக்கானது.

Google Business பக்கதிற்கான சுட்டி


மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து Google Business பக்கத்திற்கு செல்லவும். பின் START NOW என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து உங்களுடைய கூகுள் கணக்கினை கொண்டு லாகின் செய்து கொள்ளவும்.


பின்  மேலே உள்ள விண்டோ போன்று தோன்றும் அதில் உங்களுடைய பிசினஸ் சார்ந்த விவரங்களை உள்ளிடவும். பின் Continue என்னும் பொத்தானை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை கூகுளுக்கு அனுப்பபடும். நீங்கள் அளித்த விவரங்கள் சரியாக இருந்தால் கூகுள் தரப்பிலிருந்து 12 நாட்களுக்குள் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு ஒரு இரகசிய எண் அனுப்பபடும். அதை கூகுள் பிசினஸ் பக்கத்திற்கு சென்று , உங்கள் கணக்கில் லாகின் செய்தபின் இந்த இரகசிய எண்னை உள்ளிடவும். அவ்வளவு தான் வேலை முடிந்தது.

இப்போது கூகுள் சர்ச் எஞ்சின் சென்று சர்ச் செய்து பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட விரவரங்களை காண முடியும். நான் என்னுடைய tamilcomputer வலைப்பூவினை கூகுள் பிசினஸ் பக்கத்தில் சேர்த்துள்ளேன். நீங்கள் கூகுள் சென்று tamilcomputer என்று கூகுள் செய்து பாருங்கள்.


இந்த பதிவினை இரண்டு வீடியோ பதிவாக இட்டுள்ளேன் அதற்கான முகவரிகள் கீழே உள்ளன. அந்த வீடியோ முகவரிகளை பயன்படுத்தி எளிமையாக நீங்கள் இதை செய்ய முடியும்.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 

PART 1 :-



PART 2 :-


இலவசமாக மின்னஞ்சல் கையெப்பத்தை உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 



இன்றைய சூழ்நிலையில் அஞ்சலகம் வழியாக தபால் அனுப்பும் முறை குறைந்து குறுஞ்செய்தி (SMS, Webchat), மின்னஞ்சல் (Email) வழியாகவே செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படுகிறன. தற்போது வெப்சாட் டூல்களான வாட்ஸ்அப், டெலிகிராம், ஹைக் வழியாகவே அதிகமான உரையாடல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. என்னதான் இவ்வளவு எளிமையாக உரையாடிக்கொள்ள செயலிகள் (Application) இருந்தாலும் தொழில் முறை சார்ந்த அலுவல்களுக்கு மின்னஞ்சல் வழியாகவே தற்போதும் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறன. இவ்வாறு அனுப்பும் மின்னஞ்சல்களில் அடிப்பகுதியில் அவரவர்களுடைய கையெப்பம் (Signature) இருக்கும் இந்த கையெப்பங்களை மிக அழகான முறையில் உருவாக்க ஆன்லைனில் சில வலைதளங்கள் வழிவகை செய்கிறன அதில் முக்கியமான தளங்கள்.



1) MySignature



இந்த தளத்தின் மூலம் நீங்கள் உருவாக்கும் மின்னஞ்சல் கையெப்பமானது ஜிமெயில் , அவுட்லுக் மற்றும் ஆப்பிள் மின்னஞ்சல் சேவைகளுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதில் பெயர், முகவரி, மெபைல் எண் மற்றும் உங்களுடைய புகைப்படம் போன்றவற்றை உள்ளிட்டு கையெப்பத்தை உருவாக்கி கொள்ள முடியும். சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் , லிங்கிடுஇன் போன்ற கணக்குகளின் உங்கள் முகவரிகளையும் கூடுதளாக இந்த மின்னஞ்சல் கையெப்பத்தோடு இணைத்து கொள்ள முடியும். மேலும் இதில் நம் தேவைகேற்ப டெப்ம்லேட்டுகளையும் தேர்வு செய்து கொள்ள முடியும் என்பது இந்த தளத்தின் கூடுதல் சிறப்பு ஆகும்.

2) Hubspot Email Signature Generator


இந்த தளமும் மேலே கூறப்பட்டுள்ள MySignature தளத்தை போன்றுதான் ஆனால் இதில் டெப்ம்லேட்டுகள் எதுவும் இல்லை. ஆனால் அதற்கு ஏற்றது போல் அனைது எழுத்துகளின் கலர்களையும் நமது விருப்பத்திற்கு ஏற்ப மாறியமைத்துக்கொள்ள முடியும்.

3) WiseStamp


இந்த தளமும் மற்ற தளங்களை போன்றுதான் ஆனால் இதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் பேஸ்புக் லைக் பட்டன், டுவிட்டர் பாலோ பட்டன், யூடுயூப் விடியோ பகிர்தல் போன்று பல சமூக வலைதளங்களின் வசதிகளை இந்த தளத்தில் நாம் பெற்று கொள்ளலாம்.

4) NewOldStamp


இந்த தளத்தில் இரண்டு சேவைகள் உள்ளன ஒன்று கட்டண சேவை மற்றொன்று இலவச சேவை ஆகும். இலவச சேவையில் பெயர், முகவரி, மெபைல் எண் மற்றும் உங்களுடைய புகைப்படம் போன்றவற்றை உள்ளிட்டு கையெப்பத்தை உருவாக்கி கொள்ள முடியும். கட்டணசேவையில் இதை தவிர இன்னும் பல சேவைகளை இத்தளம் அளிக்கிறது.

5) CodeTwo Free Email Signature Generator


அனைத்து மின்ஞ்சல் சேவைகளுக்கும் இந்த தளத்தின் மூலமாக மின்னஞ்சல் கையெப்பத்தை உருவாக்கி கொள்ள முடியும். மிகவும் நேர்த்தியான மின்னஞ்சல் கையெப்பத்தை சிறந்த டிசைன்களோடு உருவாக்கி கொள்ள முடியும்.

6) Si.gnatu.re


இந்த தளத்திற்கு சென்றவுடன் Create a Signature என்னும் பொத்தானை அழுத்தவும். தோன்றும் விண்டோவில் உங்களுடைய சுயவிவரங்களை உள்ளிட்டு மிக நேர்த்தியான மின்னஞ்சல் கையெப்பத்தினை உருவாக்கி கொள்ள முடியும்.