♠ Posted by Kumaresan Rajendran in ஜி-மெயில் at April 26, 2010

நீங்கள் கோப்புகளை இணைக்க வேண்டுமென்றால், பைலை இணைக்க (Attach file) என்ற ஆப்சனை 'கிளிக்' செய்து, கோப்பு இருக்குமிடத்திற்குச் சென்று இணைக்க வேண்டும். அடுத்த கோப்பை இணைக்க வேண்டுமானால், முதல் கோப்பு இணைக்கப்படும் வரை காத்திருந்து , மறுபடியும் பைலை இணைக்க என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கோப்பு இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். இதற்கு ஆகும் நேரமும் அதிகம்; ஒவ்வொரு முறையும் கோப்பு இருக்கும் இடத்திர்ற்குச் சென்று இனைபப்து எரிச்சலை உண்டாக்கும்.
இதைத் தவிர்க்க 'டிராக் அன்ட் டிராப்' என்ற புதிய முறையை ஜி மெயில் அறிமுகப்படுத்தி உள்ளத்து. இணைக்க வேண்டிய கோப்புகளை செலக்ட் செய்து, அப்படியே தூக்கி ஜி மெயில் உள்ள கம்போஸ் மெயிலில் போட்டுவிட்டால் போதும். தானாகவே கோப்புகள் இணைக்கப்பட்டு விடும். ஒவ்வொரு கோப்பகத்தான் இணைக்கக வேண்டும் என்ற அவசியம்மில்லை எத்தனைக் கோப்புகளை இணைக்க வேண்டுமோ அனைத்தையும் ஒரே நேரத்தில் செலக்ட் செய்து தூக்கிபோட்டால் போதும். அனைத்துக் கோப்புகளும் வரிசையாக இணைக்கப்பட்டு விடும். இது எளிதான முறையாக இருப்பதுடன், குறைவான நேரத்திலேயே நிறைய கோப்புகளை இணைக்கலாம்.
குறிப்பு:
இந்த வசதி தற்போது குரோம் மற்றும் மொசில்லா பயர்பாக்ஸ் 3.6 ஆகிய இரண்டு பிரவுசர்களில் மட்டுமே இயங்கும். விரைவில் எல்லாவிதமான பிரவுசர்களிலும் இவத வசதி செயல்படும் வகையில் கூகுள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு முதலில் உங்கள் Compose window வை தனியாக திறந்து கொள்க.இதற்கு Shift + Compose Mail என்பதை கிளிக் செய்யவேண்டும்.பின் இணைக்க வேண்டிய கோப்பை இழுத்து கொண்டு வந்து விட்டாலே போதும் அதுவே இணைந்து விடும்.
0 Comments:
Post a Comment