
முன்பெல்லாம் நாம் எதாவது ஒரு பொருளை வாங்கினால் அவற்றை பற்றிய விளக்க குறிப்பு(Catalog) அச்சுவடிவில் இருக்கும். ஆனால் தற்போது விளக்ககுறிப்புகள் சீடி/டிவீடி மூலம் வீடியோவாக வருகிறது. இவ்வாறு உள்ள வீடியோக்களை நாம் மீடியா பிளேயர்களின் உதவியுடன் மட்டுமே காண முடியும். ஆனால் அதுபோன்ற வீடியோக்களை நம்முடைய மொபைல் போன்களில் காண வேண்டுமெனில் குறிப்பிட்ட வீடியோவினை கன்வெர்ட் செய்தால் மட்டுமே முடியும். அதற்கு உதவும் இலவச மென்பொருள்தான் WonTube Free Video Converter. வீடியோ பைலானது பல்வேறு பார்மெட்களில் இருக்கும். இன்றைய சூழ்நிலையில் அனைவரும் எந்த ஒரு வீடியோவையும் மொபைல் போனில் எடுத்துச்செல்லவே விரும்புவர்,...