தமிழில் கணினி செய்திகள்

இலவச வீடியோ கன்வெர்ட்டர் - விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களுக்கு

♠ Posted by Kumaresan Rajendran in ,, at February 13, 2012
முன்பெல்லாம் நாம் எதாவது ஒரு பொருளை வாங்கினால் அவற்றை பற்றிய விளக்க குறிப்பு(Catalog) அச்சுவடிவில் இருக்கும். ஆனால் தற்போது விளக்ககுறிப்புகள் சீடி/டிவீடி மூலம் வீடியோவாக வருகிறது. இவ்வாறு உள்ள வீடியோக்களை நாம் மீடியா பிளேயர்களின் உதவியுடன் மட்டுமே காண முடியும். ஆனால் அதுபோன்ற வீடியோக்களை நம்முடைய மொபைல் போன்களில் காண வேண்டுமெனில் குறிப்பிட்ட வீடியோவினை கன்வெர்ட் செய்தால் மட்டுமே முடியும். அதற்கு உதவும் இலவச மென்பொருள்தான் WonTube Free Video Converter. வீடியோ பைலானது பல்வேறு பார்மெட்களில் இருக்கும். இன்றைய சூழ்நிலையில் அனைவரும் எந்த ஒரு வீடியோவையும்  மொபைல் போனில் எடுத்துச்செல்லவே விரும்புவர், ஆனால் ஒரு சில வீடியோக்களை மொபைல் போன்களில் காண முடியாது. அவ்வாறு உள்ள வீடியோக்களை கணினியின் துணையுடன் கன்வெர்ட் செய்து அவற்றை நம் மொபைல் போன்களில் காண முடியும். நாம் சாதாரணமாக கணினியில் கன்வெர்ட் செய்ய இயலாது எதாவது ஒரு மென்பொருளில் உதவியுடன் மட்டுமே கன்வெர்ட் செய்ய இயலும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று  மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த WonTube Free Video Converter மென்பொருளை ஒப்பன் செய்யவும். அதில் குறிப்பிட்ட வீடியோவை உள்ளினைத்து விரும்பிய பார்மெட்டில் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். மேலும் நேரடியாக ஆன்லைனில் இருந்தும் பதிவிறக்கி பின் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.


இந்த மென்பொருள் தற்போது மேக் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கு தனித்தனியே கிடைக்கிறது. இதனை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நம்முடைய மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு மிகவும் எளிமையாக கன்வெர்ட் செய்து கொள்ள இந்த மென்பொருள் உதவி செய்கிறது.

3 Comments:

மிகவும் பயனுள்ள தகவல் ! நன்றி நண்பரே !

thank you friend.... and try this software FREE MAKE VIDEO CONVERTER

thank you for sharing. I use a similar application called Vidmate for pc

Post a Comment