எம்.எஸ் ஆப்பிஸ் பதிப்புகளான வேர்ட், எக்சல், பவர் பாயிண்ட் போன்ற பதிப்புகளை சாதாரணமாக பயன்படுத்தும் போது, ஒவ்வொறு பதிப்பினை பயன்படுத்தும் போது தனித்தனியே திறந்து பயன்படுத்துவோம். உதாரணமாக வேர்ட் பதிப்பில் இரண்டு கோப்புகளை உருவாக்க வேண்டுமெனில் தனித்தனியே ஒப்பன் செய்து உருவாக்குவோம். இதற்கு பதிலாய் ஒரே பதிப்பில் இருந்து கொண்டே பல்வேறு கோப்புகளை உருவாக்க முடியும். சாதாரணமாக ஆப்பிஸ் கோப்புகளை கையாளும் போது அதனை நாம் தனித்தனியாக மட்டுமே ஒப்பன் செய்து பயன்படுத்துவோம். அதற்கு பதிலாக உலாவிகளில்(Browser) போன்று ஒவ்வொரு கோப்புகளையும் டேப் வடிவில் திறக்க முடியும். இதற்கு Office Tap என்னும் சிறிய மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் கணினியில் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து நம் விருப்பபடி மாற்றங்கள் செய்து கொள்ள முடியும்.
நமக்கு ஏற்றபடி மாற்றங்களை செய்து கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருள் எம்.எஸ் ஆப்பிஸ் தொகுப்புகளான 2003,2007 மற்றும் 2010 ஆகிய தொகுப்புகளை ஆதரிக்க கூடியது ஆகும். மேலும் இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்சல் மற்றும் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் டேப் வடிவில் திறக்க முடியும்.
5 Comments:
பயனுள்ள தகவல் ! வாழ்த்துக்கள் ! மிக்க நன்றி நண்பரே !
Nice tool, Thanks a lot
வணக்கம் சார்,
புதிதாக கணினி வாங்கி உள்ளேன். சில folderகளை பெர்சனலாக வைக்க விரும்புகின்றேன். அவற்றை password குடுத்தால் மட்டுமே திறக்குமாறு செய்ய வேண்டும். வழி என்ன?
வணக்கம் சார்,
வேறு ஒரு உதவி தேவை. புதிதாக கணினி வாங்கி உள்ளேன். சில ஃபோல்டர்களை பெர்சனலாக வைக்க விரும்புகின்றேன். அவற்றை பாஸ்வேர்டு குடுத்தால் மட்டுமே திறக்குமாறு செய்ய வேண்டும். வழி என்ன?
very nice post and helpful
Post a Comment