தமிழில் கணினி செய்திகள்

உங்களுடைய கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது

♠ Posted by Kumaresan R in ,
உங்களுக்கு தெரியுமா, உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது எப்போது என்று, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பிறந்தநாள் எப்போது என்று கேட்டால் சொல்லிவிடுவார்கள் ஆனால் அவர்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்றால் அவர்களால் சொல்ல முடியாது, ஏனென்றால் இதனை யாரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை ஏதோ ஒரு காரணத்திற்காக கூகுள் கணக்கினை உருவாக்கியிருப்போம். பின் அதே கணக்கினை அனைத்து கூகுள் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பெற பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் கூகுள் கணக்கானது எப்போது உருவாக்கப்பட்டது என்றால் அது நமக்கு தெரியாது. சரி கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது என்று கண்டறிய வழி இருக்கிறதா என்றால், இருக்கிறது என்றே கூறலாம். சரி ஏன் இந்த கூகுள் கணக்கு உருவாக்கப்பட்ட நாள் நமக்கு தெரிய வேண்டும், நம்முடைய கடவுச்சொல் மறக்கும்போது அதனை மீண்டும் பெற கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டதேதி மிகவும் அவசியம் ஆகும்.இதனை கண்டறிய முதலில் Google Takeaway பக்கத்திற்கு செல்லவும். இதற்கான சுட்டி. பின் Transfer your Google+ connections to another account என்னும் சுட்டியை கிளிக் செய்யவும்.பின் உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்ற விவரம் காண்பிக்கப்படும்.

கூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்

♠ Posted by Kumaresan R in
மின்னனு புத்தகங்கள் பெரும்பாலும் பதிவிறக்கம் செய்ய அனைவரும் நாடுவது கூகுள் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய எந்த ஒரு இணைப்பு சுட்டியும் இருக்காது. எனவே இந்த புத்தகங்களை நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது. கணிப்பொறி வாயிலாக காண முடியுமே தவிர பதிவிறக்கம் செய்ய முடியாது. எனினும் இந்த புத்தகங்களை விலைகொடுத்து வாங்கி கொள்ள முடியும். இதனை இலவசமாக பெற முடியாத என்றால், ஏன் முடியாது, முடியும். அதற்கு ஒரு இலவச Google Books Downloader மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக கூகுள் புத்தகங்களை இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த Google Books Downloader மென்பொருளை ஒப்பன் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டிய புத்தகத்தின் முகவரியை குறிப்பிட்டு, குறிப்பிட்ட புத்தகமானது எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து, பின் Download Book as PDF, Download Book as Image என்ற பொத்தான்களை அழுத்தி கூகுள் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின் சிலமணி நேரங்களில் நீங்கள் குறிப்பிட்ட புத்தகமானது, நீங்கள் குறிப்பிட்ட பைல் பார்மெட்டில், குறிப்பிட்ட இடத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும்.

MS ஆப்பிஸ் டாக்குமெண்ட்களை டேப் வடிவில் திறக்க

♠ Posted by Kumaresan R in ,
எம்.எஸ் ஆப்பிஸ் பதிப்புகளான வேர்ட், எக்சல், பவர் பாயிண்ட் போன்ற பதிப்புகளை சாதாரணமாக பயன்படுத்தும் போது, ஒவ்வொறு பதிப்பினை பயன்படுத்தும் போது தனித்தனியே திறந்து பயன்படுத்துவோம். உதாரணமாக வேர்ட் பதிப்பில் இரண்டு கோப்புகளை உருவாக்க வேண்டுமெனில் தனித்தனியே ஒப்பன் செய்து உருவாக்குவோம். இதற்கு பதிலாய் ஒரே பதிப்பில் இருந்து கொண்டே பல்வேறு கோப்புகளை உருவாக்க முடியும்.  சாதாரணமாக ஆப்பிஸ் கோப்புகளை கையாளும் போது அதனை நாம் தனித்தனியாக மட்டுமே ஒப்பன் செய்து பயன்படுத்துவோம். அதற்கு பதிலாக உலாவிகளில்(Browser) போன்று ஒவ்வொரு கோப்புகளையும் டேப் வடிவில் திறக்க முடியும். இதற்கு Office Tap என்னும் சிறிய மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டிமென்பொருளை இணையத்தின் உதவியுடன் கணினியில் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து நம் விருப்பபடி மாற்றங்கள் செய்து கொள்ள முடியும்.நமக்கு ஏற்றபடி மாற்றங்களை செய்து கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருள் எம்.எஸ் ஆப்பிஸ் தொகுப்புகளான 2003,2007 மற்றும் 2010 ஆகிய தொகுப்புகளை ஆதரிக்க கூடியது ஆகும். மேலும் இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்சல் மற்றும் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் டேப் வடிவில் திறக்க முடியும்.

அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய ஒரே மென்பொருள்

♠ Posted by Kumaresan R in ,
தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தியையும் தெளிவாக பார்க்க வேண்டுமெனில் அது வீடியோவாக இருப்பின் சிறப்பாக இருக்கும். அவ்வாறு உள்ள வீடியோக்களை இணையத்தின் உதவியுடன் காண முடியும்.  அவ்வாறு காணும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்பது கடினமான செயல் ஆகும். வீடியோக்களை காண நாம் அனைவரும் அதிகமாக அனுகுவது யூடியூப் தளம் ஆகும். இதுபோன்று இன்னும் பல்வேறு தளங்கள் உள்ளன. இதுபோன்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒருசில மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன. அவற்றில் முக்கியமான மென்பொருள் vDownloader ஆகும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து வீடியோவின் முகவரியை (URL) உள்ளிடவும். பின் நீங்கள் குறிப்பிட்ட வீடியோவானது தரவிறக்கம் ஆகும். சில மணி நேரங்களில் வீடியோவானது தரவிறக்கம் செய்யப்பட்டு விடும். இந்த மென்பொருள் அதரிக்க கூடிய தளங்களில் சில குறிப்பிடதக்க தளங்கள்.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள தளங்களில் உள்ள வீடியோக்களை எளிமையாக  தரவிறக்கம் செய்து கொள்ள இந்த மென்பொருள் உதவி செய்கிறது. இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.