♠ Posted by Kumaresan Rajendran in Freewares at September 15, 2013
வீட்டில் எப்படி தனித்தனி அறைகளாக சமையல் அறை, பூஜை அறை என்று வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியிலும் பாட்டு, படம், வீடியோ என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கோப்பறைகள் வைத்திருப்போம். பொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்பறையினை உருவாக்கும் போது அது மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கும் நாம் விரும்பினால் அதனை வேறு ஒரு நிறத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் கோப்பறையின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Colorize! என்பதை தெரிவு செய்யவும். தோன்றும் துணை வரிசையில் குறிப்பிட்ட நிறத்தினை தேர்வு செய்யவும். சில நிமிடங்களில் குறிப்பிட்ட நிறத்தில் கோப்பறையின் நிறம் மாற்றப்படும்.
0 Comments:
Post a Comment