தமிழில் கணினி செய்திகள்

கணினியை பாதுகாக்க Wise PC Engineer மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
கணினியில் தினமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் இதன் காரணமாக கணினி தேய்மானம் அடைவதோடு, கணினியினுடைய இயக்கமும் மந்தமடையும். நிறுவப்பட்ட மென்பொருள்களில் திறனும் குறைந்து கொண்டே வரும், அதாவது மென்பொருள் இயங்கும் வேகமும் குறையும். நம்முடைய கணினியில் புதியதாக வரும் மென்பொருளை நிறுவி பயன்படுத்துவோம், அந்த மென்பொருள் பிடிக்கவில்லை என்றாலும், மென்பொருள் தேவையில்லையென்றாலும் கணினியில் இருந்து நீக்கிவிடுவோம். அவ்வாறு நீக்கம் செய்யும் மென்பொருள்கள் முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. அதில் ஒரு சில குறிப்பிட்ட பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும். இதனாலும் கணினி செயல்பாடுகளில் வேகம் குறைய தொடங்கும். இதனால் கணினியில் பணியாற்றவே, கணினி பயனாளர்களுக்கு தொந்தரவாக அமையும், அப்ளிகேஷன்களை ஒப்பன் செய்தால் தொடங்கும் நேரமே அதிகமாகும். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டுமெனில் நம்முடைய கணினியை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அதாவது நம் கணினியில் தேங்கியுள்ள குப்பைகளை நீக்கம் செய்ய வேண்டும். வன்தட்டினை முழுமை படுத்த வேண்டும், ரிஸிஸ்டரியை சுத்தம் செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளை செய்ய வேண்டுமெனில், மென்பொருளின் உதவியை நாட வேண்டும். இதுபோன்ற மென்பொருள்கள் அனைத்தும் பணம் செலுத்தியே பெற வேண்டும் தற்போது Wise PC Engineer மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் Captcha code னை உள்ளிட்டு Submit பொத்தானை அழுத்தவும். உடனே மென்பொருளானது பதிவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கண்னியில் நிறுவிக்கொள்ளாவும். இந்த மென்பொருளை மூன்று கணினிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளானது விண்டோஸ்(32,64 பிட்) இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் ரிஸிஸ்டரியை கிளின் செய்ய முடியும். மேலும் பேக்அப் செய்துகொள்ள முடியும்.  ரிஸிஸ்டரியை முழுமைபடுத்தவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. 


வன்தட்டினை முழுமைபடுத்தவும், கிளின் செய்யவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. தொலைந்து போன கோப்புகளை கண்டறிந்து மீட்டுக்கொள்ளவும். இந்த மென்பொருள் உதவி செய்கிறது. கோப்பறைகளை மறைத்து வைக்கவும். இன்னும் பல வசதிகளை இந்த மென்பொருள் மூலம் பெற முடியும். வன்தட்டு மற்றும் ரிஸிஸ்டரியை கிளின் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு கணியிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான மென்பொருள் ஆகும்.

பிடித்த பாடல்களை இணையத்தில் தேடி பெற WinGrooves

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள். இதற்கெனவே ஒரு கூட்டம் உள்ளது. இதுபோன்றவர்கள், இணையத்தை அதிகம் நாடுவதே பாடலை கேட்கதான். இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வேண்டும். இல்லையெனில் நாம் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும். ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது. என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை சல்லடையாய் தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கதான் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு, இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும். பின் Search for Music என்ற செக் பாக்சில் வேண்டிய குறிச்சொல்லை இட்டு பாடலை தேடிப்பெறவும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் Shortcut உள்ளது அதை பயன்படுத்தி எளிமையாக பயன்படுத்த முடியும்.


இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். வேண்டிய பாடலை எளிமையாக தேடிப்பெற முடியும். இணையைஇணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் எந்த உலவியும் தேவையில்லை. இந்த மென்பொருளின் உதவியுடனே பாடல்களை தேடிப்பெற முடியும். பயன்படுத்தி பாருங்கள் அருமையாக இருக்கும். பின் உங்கள் கருத்தை கூறுங்கள்.

ட்ரைவர்களை அப்டேட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை பொறுத்தவரை ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவிய உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை, அந்ததந்த குறிப்பிட்ட ஹார்டுவேர் சாதனங்களுக்கு ஏற்ற ட்ரைவர்களை நிறுவ வேண்டும். குறிப்பிட்ட ட்ரைவர் இருந்தால் பிரச்சினை இல்லை, ட்ரைவர்கள் இல்லாத போதுதான் நமக்கு பிரச்சினை ஆரம்பம். நண்பர்களிடம் ட்ரைவர்களை வாங்கி இன்ஸ்டால் செய்வோம், இல்லையெனில் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை பதிவிறக்கம் செய்து கணினியில் பதிந்து கொள்ள வேண்டும். சரி ஒரு வழியாக ட்ரைவர்களை இன்ஸ்டால் செய்து முடிந்தாகி விட்டது. நாம் இன்ஸ்டால் செய்திருக்கும் ட்ரைவர்கள் பழைய வெர்சனாக இருப்பின் கணினியில் செயல்பாடு மந்தமாக இருக்கும். இந்த சூழ்நிலையை சமாளிக்க நம் கண்னியில் நிறுவப்பட்டிருக்கும் ட்ரைவர்களை அப்டேட் செய்ய வேண்டும். இந்த ட்ரைவர்களை அப்டேட் செய்ய நாம் புதியதாக ட்ரைவர்களை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Scan Now என்ற பொத்தானை அழுத்தவும். ஒரு சில மணி நேரங்களில் உங்களுடைய கணினியானது சோதிக்கப்பட்டு, முடிவுகள் தெரியவரும்.


பின் உங்கள் விருப்பபடி வேண்டிய ட்ரைவர்களை அப்டேட் செய்து கொள்ள முடியும். இதனால் உங்களுடைய கணினியானது மிக விரைவாக செயல்பட தொடங்கும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளானது விண்டோஸ் எக்ஸ்பி,2003,விஸ்டா மற்றும் ஏழு (32,64 பிட்) ஆகிய இயங்குதளங்களில் வேலைசெய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் கோடிக்கணக்கான ட்ரைவர்களை அப்டேட் செய்து கொள்ள முடியும். தினமும் புதியபுதிய ட்ரைவர்கள் சந்தையில் வெளிவந்துகொண்டிருக்கிறன. அனைத்து ட்ரைவர்களையும் அப்டேட் செய்து கொள்ள முடியும்.

விஸ்டா ஸ்டார்ட் மெனு

♠ Posted by Kumaresan Rajendran in ,
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமானது பல்வேறு பரிமாணங்களை பெற்றுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். முதலில் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமானது எம்.எஸ்.டாஸ் விண்டோவாக மட்டுமே இருந்தது ஆனால் கணிப்பொறி பயன்பாட்டின் வளர்ச்சியின் காரணமாக விண்டோசிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்கி இன்று விண்டோஸ் 7 வரை வளர்ந்துள்ளது. இந்த புதிய ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமானது முன்பு இருந்த ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை விட பல வகையில் சிறப்பு தோற்றத்தை பெற்றது ஆகும். கிராப்பிக்ஸ் தோற்றத்தில் பல மாறுதல்கள் அடைந்துள்ளது. வெளிவர இருக்கும் விண்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமானது 3D தோற்றத்தில் வெளிவர கூடும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கணினி பயனாளர்களிடம் ஆய்வு நடத்தி வருகிறது. என்னதான் புதுப்புது வசதிகள் புகுத்தப்பட்டாலும் ஒருசில கணினி பயனாளர்கள் பழயனவைகளையே விரும்புகிறனர். அந்த வகையில் விஸ்டாவின் எழிலை பெற ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் ஸ்டார்ட் பொத்தானை அழுத்தினால் விண்டோஸ் விஸ்டாவின் எழிலை பெற முடியும். இல்லையெனில் Start > Programs வழியாக சென்று இந்த அப்ளிகேஷனை தேர்வு செய்வதன் மூலமாகவும். இந்த விஸ்டா ஸ்டார்ட் மெனுவை பெற முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை விண்டோஸ் NT, 2000, 2003, XP, விஸ்டா மற்றும் ஏழு ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.

இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் நாம் இந்த மென்பொருளை சாதாரண அப்ளிகேஷன்களை போலவே இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். ஸ்டார்ட் மெனுவை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். சுருக்கி நீட்டிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது டேப் வாரியாக மெனுக்களை பட்டியலிடுகிறது. எந்த ஒரு கணினியிலும் இந்த மென்பொருள் கனகச்சிதமாக வேலை செய்கிறது. நாம் முன்பு பெற்ற மெனுவை பெற வேண்டுமெனில் Shift பொத்தானை அழுத்திக்கொண்டு Start மெனுவை கிளிக் செய்யவும். இந்த மென்பொருளை பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் பதிலை கூறுங்கள்.

பேஸ்புக் தளத்தில் உள்ள போட்டோக்களை பதிவிறக்கம் செய்ய கூகுள் குரோம் நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
பேஸ்புக் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் தளம் ஆகும். இந்த தளத்தில் நம்முடைய கருத்துக்கள், போட்டோக்கள், வீடியோக்கள், சுயதகவல்களை உள்ளிட்டு அதனை நண்பர்களிடம் பரிமாறிக்கொள்ள முடியும். இதில் உள்ள தகவல்களை நாம் தரவிறக்கி பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால் நாம் தரவிறக்கம் செய்வதற்கான வழிகள் யாவும் பேஸ்புக் தளத்தில் நேரிடையாக கொடுக்கப்பட்டிருக்காது, எனவே பேஸ்புக் தளத்தில் உள்ள வீடியோ, போட்டோவினை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் மூன்றாவது வழியை மட்டுமே நாட வேண்டும். பேஸ்புக் தளத்தில் உள்ள வீடியோவினை தரவிறக்கம் செய்வதற்கான நெருப்புநரி நீட்சி. போட்டோவினை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்கும் பல்வேறு வழிகள் இணையத்தில் உள்ளன. அதில் ஒன்றுதான் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்தி பேஸ்புக் போட்டோவினை தரவிறக்கம் செய்தல் ஆகும்.

நீட்சியை தரவிறக்கம் செய்ய சுட்டி


கூகுள் குரோம் உலவியினை திறந்து இந்த நீட்சியை பதிந்து கொள்ளவும், பின் ஒருமுறை கூகுள் குரோம் உலவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் பேஸ்புக் கணக்கை திறந்து எந்த புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அந்த இடத்திற்கு செல்லவும். உதாரணமாக உங்களுடைய நண்பரின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அவருடைய பேஸ்புக் அக்கவுண்டிற்கு சென்று, அவருடைய புகைப்பட பட்டியை அழுத்தி புகைப்பட மெனுவிற்கு செல்லவும். இப்போது Download Facebook album's photos என்னும் ஐகானை அழுத்த்தவும்.

அடுத்ததாக தோன்றும் விண்டோவில் "Ctrl+S" ஐகான்களை ஒருசேர அழுத்தி படங்களை கணினியில் சேமித்துக்கொள்ள முடியும். முழு வலைப்பக்கமும் சேமிக்கப்பட்டுவிடும்.


இந்த நீட்சியானது பேஸ்புக் படங்களை மிக துல்லியமாக தரவிறக்கம் செய்ய உதவுகிறது. மேலும் உங்களுடைய நண்பர்களுடைய போட்டோக்களை மிக எளிதாக தரவிறக்கம் செய்ய இந்த நீட்சி உதவும்.

நெருப்புநரி உலவியில் Sessionrestore னை நாமே உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
நெருப்புநரி உலவியில் பணியாற்றும் போது எதோ ஒரு சில காரணத்தால் கிராஷ் ஆகி மீண்டும் மறுதொடக்கம் ஆகும். அப்போது முன்பு பார்த்துகொண்டிருந்த வலைப்பக்கங்களை மீண்டும் ரீஸ்டோர் செய்யவா இல்லை புதிய பக்கத்தை விண்டோவினை திறக்கவா போன்ற செய்திகள் தோன்றும். இந்த வசதியானது நாம் எதாவது ஒரு முக்கியமான வலைப்பக்கத்தை பார்த்து கொண்டிருப்போம். ஆனால் ஒரு சில தவறால் நெருப்புநரி உலவியானது மூடப்படும். அப்போது அந்த தளத்தை நாம் எவ்வாறு பெறுவது, இப்போதுதான் முதல்முறையாக அந்த தளத்தை பார்வையிடுகிறோம் என்றால் என்ன செய்வது, ஹிஸ்டரியில் இருக்கும் என்று சென்று பார்த்தால் அங்கும் நம்முடைய கெட்டகாலம் விட்டு வைக்காது, நாம் பார்த்த வலைப்பக்கத்திற்கான அடையாளமே இருக்காது. ஆனால் நெருப்புநரி உலவியில் உள்ள ரீஸ்டோர் ஆப்ஷனை பயன்படுத்தி மீண்டும் இழந்த வலைப்பக்கத்தை மீட்டுவிட முடியும். ஒரு சில நேரங்களில் மீண்டும் நெருப்புநரி உலவியை மறுதொடக்கம் செய்யும் போதே இந்த ரீஸ்டோர் ஆப்ஷன் கேட்கும், அவ்வாறு கேட்காத போது நாமே இந்த ரீஸ்டோர் ஆப்ஷனை உருவாக்கி கொள்ள முடியும்.


நெருப்புநரி உலவியை திறந்து அட்ரஸ் பாரில் about:sessionrestore என்று தட்டச்சு செய்து, ஒகே செய்யவும். இப்போது நீங்கள் முன்பு திறந்து இருந்த அனைத்து விண்டோக்களை ரீஸ்டோர் செய்யவா, இல்லை புதிய விண்டோவினை திறக்கவா என்ற செய்தி தோன்றும். அதை பயன்படுத்தி மீண்டும் பழைய இணைய பக்கங்களை பெற முடியும்.


இந்த வசதியானது பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும். மிக முக்கியமான சூழ்நிலையில் கைகொடுக்கும்.

விண்டோஸ்7ல் Shell கிளாசிக் மெனு

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமானது, பல்வேறு புதிய பரிமானங்களுடன் வெளிவந்துள்ள விண்டோசின் புதிய பதிப்பாகும். இதில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட செயல்கள் பல அடங்கும். குறிப்பாக முந்தைய பதிப்புகளை விட பல புதிய அம்சங்கள் இந்த பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது, முன்பெல்லாம் Start சென்று புரோகிராம்ஸ் வழியாக பயன்பாடுகளை திறப்போம். அதே போல் தான் இந்த புதிய பதிப்பிலும் ஆனால் ஒரு சிறிய மாற்றம் இவையனைத்தும் ஒன்றன் கீழ் ஒன்றாக மட்டுமே தெரியும். இதனால் ஒரு சில கணினி பயனாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக புதியவர்களுக்கு இந்த மெனுக்கள் தொந்தரவாக இருக்கும். முன்பு பயன்படுத்திய விண்டோஸ் எக்ஸ்பியில் பனியாற்றிய கணினி பயனாளர்களுக்கு இந்த புதிய மெனுக்கள் ஒரு சோம்பலை உண்டாக்கியது. நணபர் ஒருவர் நேற்று மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விண்டோஸ் எக்ஸ்பில் போல கிளாசிக் மெனுக்களை விண்டோஸ் 7ல் வரவைக்க முடியுமா என்று வினவினார். இதோ அவருக்கான பதில் கீழே.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் நீங்கள் உங்களுடைய விண்டோஸ்7 நிறுவப்பட்ட கணினியில் கிளாசிக் மெனுவை காண முடியும்.


இந்த கிளாசிக் மெனு வேண்டாம் என்றால், Shift பொத்தானை அழுத்தியவாறு START ஐகானை கிளிக் செய்யவும். தற்போது மீண்டும் பழைய மெனுவை காண முடியும். மேலும் விண்டோஸ் எக்ஸ்புளோரரிலும் பழைய வசதிகளை மீண்டும் பெற முடியும்.


இந்த மென்பொருளில் மேலும் பல்வேறு வசதிகள் உள்ளன, கட், காப்பி, பேஸ்ட் போன்ற ஐகான்களையும் பெற முடியும். இந்த கட், காப்பி, பேஸ்ட் போன்ற ஐகான்கள் விண்டோஸ் 7ல் தெரியவில்லை, ஆனால் விண்டோஸ் விஸ்டாவில் தெரிகிறது. நாம் விண்டோஸ் எக்ஸ்பியில் பணியாற்றும் சூழ்நிலையை விண்டோஸ் 7லும் பெற முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ்7 32பிட், 64பிட் இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.


இந்த மென்பொருளானது மிகவும் புதுமையாகவும், பயனுள்ளதாகவும் அமையும், ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு கூறுங்கள்.

நெருப்புநரி உலவியில் கடவுச்சொற்களை காப்பாற்ற முதன்மை கடவுச்சொல்

♠ Posted by Kumaresan Rajendran in
நெருப்புநரி உலவியின் துணைக்கொண்டு இணைய பக்கங்கங்களை வலம் வரும்போது பல தளங்களில் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்களை உள்ளிட்டு பல்வேறு கணக்குகளில் நுழைவோம். அந்த சூழ்நிலைகளில் நம்மை அறியாமலேயே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை சேமித்துவிடுவோம். நம்முடைய சொந்த கணினியாக இருந்தாலும், மிக முக்கியமான கடவுச்சொற்களாகிய பேங்க் சம்பந்தமான கடவுச்சொற்கள் சேமிக்கப்படும் போது அது நமக்கு பெரும் ஆபத்தாகும். இதனால் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும். நம்முடைய கணக்கில் உள்ள பணத்தினை இழக்க நேரிடும். அல்லது நம்முடைய கணக்கானது முடக்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டுமெனில் இந்த உலவியில் பதியப்பட்ட கடவுச்சொல்லை முழுமையாக நீக்க வேண்டும். கடவுச்சொல்லை நீக்க சுட்டி. இல்லை இந்த கடவுச்சொல்களுக்கே கடவுச்சொல் இட்டு பாதுகாத்தால் எப்படி இருக்கும். கடவுச்சொல்களுக்கு எவ்வாறு கடவுச்சொல்லை உருவாக்கு என்று கீழே காண்போம்.

முதலில் நெருப்புநரி உலவியினை திறந்து கொள்ளவும். பின் Tools > Option என்பதை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்தவுடன், தோன்றும் விண்டோவில் Security டேப்பினை தேர்வு செய்து, அதில் “Use a master password” என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். 


டிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய முதன்மை கடவுச்சொல்லினை உள்ளிட்டு ஒகே செய்யவும்.


அவ்வளவுதான் இனி நீங்கள் உங்களுடைய சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லை காண வேண்டுமானால் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகுதான் காண முடியும். சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லோடு தொடர்புடைய வலைப்பக்கத்திற்கு சென்றால், முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட சொல்லி ஒரு பெட்டி தோன்று அதில் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்டு அந்த தளத்தில் நுழைந்து கொள்ள முடியும். மொத்தத்தில் தவறு செய்தாலும் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்பதை போல, ஏற்கனவே பல்வேறுகடவுச்சொற்கள் சேமிக்கப்பட்டுள்ளது அதை பாதுக்காக்க முதன்மை கடவுச்சொல்.

நெருப்புநரி உலவியின் எழிலை மேம்படுத்த ஒரு நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran
நெருப்புநரி உலவியினுடைய புதிய பதிப்பான 4 தற்போது வெளியிடப்பட்டது. இந்த உலவியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. பெருமளவில் இணைய பயனாளர்களால் பயன்படுத்தப்படும் உலவிகளில் முதலிடத்தில் இருக்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரரை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறும் காலம் வெகு தூரத்தில் இல்லை, அந்த அளவுக்கு மிகவும் பிரபலமான உலவியாக நெருப்புநரி உலவி தற்போது உருவெடுத்துள்ளது அந்த அளவிற்கு நெருப்புநரியினுடைய வேகம் உள்ளது. நெருப்புநரி உலவியினுடைய புதிய பதிப்பு தற்போது 4 வெளியிடப்பட்டுள்ளது. நெருப்புநரி 4 உலவினுடைய எழிழை மேம்படுத்த ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை பயன்படுத்தி பல்வேறு விதமான மாற்றங்களை செய்ய முடியும். 

நீட்சியை தரவிறக்க சுட்டி


இணையத்தின் உதவியுடன் நீட்சியை நெருப்புநரி உலவி 4ல் பதிந்து கொள்ளவும். பின் ஒருமுறை உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின்என்ற ஐகானை அழுத்தி தோன்று விண்டோவில் உங்களுக்கான மாற்றங்களை செய்து கொள்ள முடியும்.

 
 


இதுபோன்ற பல்வேறு மாற்றங்களை செய்ய முடியும். நெருப்புநரி டேப்பினுடைய கலர், அகலம், உயரம் போன்றவற்றை மாற்றங்களை செய்து கொள்ள முடியும். டூல் பாரினுடைய கலர், அகலம், உயரம், லிங் போன்றவைகளையும் நம்முடைய விருப்பபடி மாற்றிக்கொள்ள முடியும். மேலும் அட்ரஸ்பாரினுடைய பட்டையையும் மாற்றிக்கொள்ள முடியும். மொத்தத்தில் நெருப்புநரி4 உலவியை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த நீட்சியானது நெருப்புநரி4 உலவியில் மட்டுமே செயல்படக்கூடியது ஆகும்.

வன்தட்டில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

Flash, MP4 வீடியோ கன்வெர்ட்டர்கள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan Rajendran in ,
வீடியோக்களை கன்வெர்ட் செய்ய உதவும் மென்பொருட்கள் சந்தையில் நாள்தோறும் வந்து கொண்டே உள்ளன. இதுபோன்ற மென்பொருள்கள் யாவும் விலை கொடுத்தே வாங்க வேண்டும். பணம் செலுத்தி பெற முடியாதவர்கள். இலவசமாக இணையத்தில் தேடி பெற முடியும். ஆனால் நாம் அவ்வாறு இணையத்தை சல்லடையாய் சளித்து பார்த்தாலும் சரியான மென்பொருள் ஒன்றும் அகப்படாது. என்னடா இது நம்ம நேரமா என்று நம்மை நாமே திட்டிக்கொள்ள வேண்டியதுதான். நம்மிடம் இருக்கும் வீடியோ பைல் பார்மெட்டானது நம்முடைய கணினியில் இயங்காது. இல்லையெனில் மொபைல் போனில் இந்த வீடியோ பைல் பார்மெட் இயங்காது என்ற செய்தி ஒன்று வரும். இந்த வீடியோவை எப்படியாவது கன்வெர்ட் செய்துவிட வேண்டுவிட வேண்டும். என்று இணையத்தில் நுழைந்து மென்பொருளை தேடுவோம் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும் கிடைக்கும் மென்பொருள்கள் யாவும் சரியான முறையில் இயங்காது, ஒவ்வொரு மென்பொருளிலும் எதாவது ஒரு குறை இருக்கும். கடைசியில் மென்பொருள்களை பணம் செலுத்தி பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளப்படுவோம். ஒரு சில நேரங்களில் இதுபோன்ற மென்பொருள்கள் இலவசமாய் கிடைக்கிறன. அந்த சூழ்நிலையை பயன்படுத்தி மென்பொருளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள்களுக்கான லைசன்ஸ் கீயானது இதே சுட்டியிலேயே உள்ளது. அந்த கீகளை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். மேலும் இந்த இரண்டு மென்பொருள்களும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய சிறந்தொரு மென்பொருள்கள் ஆகும்.



Flash வீடியோ கன்வெர்ட்டரின் சந்தை மதிப்பு $29.95, MP4 வீடியோ கன்வெர்ட்டரின் சந்தை மதிப்பு $24.95 ஆகும். இந்த இரண்டு வீடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்களும் ஏப்ரல் 20, 2011 வரை மட்டுமே இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். MP4 வீடியோ கன்வெர்ட்டர் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்கள் DivX, XviD, MPEG, MOV, MPG, MOD, QuickTime, RM, rmvb, 3GP, 3G2, SWF, GIF, DV, MJPEG, VOB, WMV, ASF, AVI, MPEG மற்றும் பல வீடியோ பைல் பார்மெட்கள் ஆகும். Flash வீடியோ கன்வெர்ட்டர் இணைய வீடியோவை உருவாக்க மிகவும் உதவியாக இருக்கும். மொத்தத்தில் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இந்த மென்பொருள்கள் மிகவும் உதவியாக இருக்கும். இந்த இரண்டு மென்பொருள்களை பயன்படுத்துவதும் மிகவும் எளிமையான ஒன்றாகும்.

Ashampoo Burning Studio Elements 10-யை இலவசமாக லைசன்ஸ் கீயுடன் பெற

♠ Posted by Kumaresan Rajendran in
கோப்புகளை சீடி/டிவிடிக்களில் எழுதுவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் நீரோ ஆகும். ஒரு சில கணினி பயனாளர்கள் மட்டுமே மாற்று சீடி/டிவிடி எழுதிகளை கையாளுகிறனர். இதுபோன்ற சீடி/டிவிடி எழுதி  மென்பொருள்கள் அனைத்துமே விலை கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இலவச மென்பொருள்கள் யாவும் சொல்லும்படியாக இல்லை. அப்படியே ஒரு மென்பொருள் உள்ளது என்றாலும் அந்த மென்பொருளை கொண்டு குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக டேட்டா சீடி/டிவிடிக்களை மட்டுமே உருவாக்க முடியும். இல்லையெனில் ஆடியோதனி வீடியோதனி எனத்தனிதனி மென்பொருள்களை நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்த வேண்டும். ஒரு சில நேரங்களில் அதுவும் சரியாக வேலை செய்யாது. ஒழுங்கான சீடி/டிவிடி எழுதியை பெற வேண்டுமெனில் நாம் பணம் செலுத்திதான் ஆக வேண்டும். இலவசமாக பெற வழியே இல்லையா என்ற எண்ணம் வேண்டும். ஒரு சில நேரங்களில் விலைகொடுத்து பெறவேண்டிய மென்பொருள்களை விலைகொடுத்துதான் பெற வேண்டும். அதுமாதிரிதான் தற்போது Ashampoo Burning Studio Elements 10 இலவசமாக லைசன்ஸ் கீயுடன் வழங்கப்படுகிறது.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவவும், இறுதியாக நிறுவி முடிக்கும்போது உலவியின் துணையுடன் ஒரு வலைப்பக்கம் தோன்றும், அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட சொல்லும். மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Send பொத்தானை அழுத்தவும். பின் மின்னஞ்சலை ஒப்பன் செய்து அதில் புதியதாக ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அதை ஒப்பன் செய்து லைசன்ஸ் கீ பெறுதவற்கான லிங்கை ஒப்பன் செய்யவும். பின் உங்களுடைய சுய விவரங்களை உள்ளிடடு, ஒகே செய்யவும் உடனே உங்களுக்கான இலவச லைசன்ஸ் கீயானது கிடைக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும்.

இந்த மென்பொருளானது 14 April 2011 இரவு வரை மட்டுமே இலவசமாக பெற முடியும். இந்த மென்பொருளுடைய சந்தை விலை $29.99 (£19.99) ஆகும். ஆனால் தற்போது இந்த மென்பொருள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மென்பொருளின் உதவியுடன் சீடி/டிவிடிக்களில் டேட்டா, வீடியோ, ஆடியோ போன்ற பைல்களை ரைட் செய்து கொள்ள முடியும். CD,DVD,Blu-ray போன்ற சீடிக்களை இந்த மென்பொருளின் உதவியுடன் எழுதிக்கொள்ள முடியும்.

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள் - Wondershare iMate

♠ Posted by Kumaresan Rajendran in
முன்னொரு காலத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் வைத்திருக்கும் பயனாளர்கள் என்றால் தேடிப்பிடிக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை எங்கு பார்த்தாலும் எல்லாருடைய கைகளிலும் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உள்ளது. இந்த ஐபோன் மற்றும் ஐபேட்களை கணினியுடன் இணைப்பதற்கு பயன்படும் மென்பொருள் Wondershare iMate ஆகும். இந்த மென்பொருளின் சந்தைவிலை $59.95 ஆகும். இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள் 2,ஏப்ரல் 2011 வரை மட்டுமே இலவசமாக கிடைக்கும். இந்த மென்பொருளின் உதவியுடன் டேட்டாக்களை எளிமையாக ஐபேட் மற்றும் ஐபோன்களில் ஏற்றம் செய்ய முடியும்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Get Keycode என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே இலவச கீ பெறுவதற்கான பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்துச்செல்லும். அங்கு உங்களுடைய பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு Like என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக Get Keycode பொத்தானை அழுத்தவும். உடனே உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு லைசன்ஸ் கீ அனுப்பி வைக்கப்படும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். மின்னஞ்சல் முகவரியில் உள்ள லைசன்ஸ் கீயினை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள ஐபேட் மற்றும் ஐபோன்கள் பட்டியலிடப்படும், பின் அதை தேர்வு செய்து வேண்டிய பைல்களை காப்பி செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் DVD க்களில் இருந்து நேரிடையாக பைல்களை மாற்றிக்கொள்ள முடியும். வேண்டுமெனில் பைல்களை பேக்அப் செய்து கொள்ள முடியும். ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான சிறந்த  மென்பொருள் Wondershare iMate ஆகும்.